தெய்வங்களைப் புரிந்துகொள்ளுதல்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள்
------------------------------------------------
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.

நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் தெய்வங்கள்,பேய்கள் தேவர்கள் நூலை படித்த பின்பு நான் என் எண்ணங்களை கீ ழ்வருமாறு தொகுத்து கொண்டேன்.தங்களின் ரப்பர்,வெண்முரசு நாவல் வரிசைகள்,விஷ்ணுபுரம்,காடு,ஏழாம் உலகம் இவற்றை படித்து நான் சிறு பதிவுகள் எழுதி இருக்கிறேன்

இரண்டு மாதத்திற்கு முன்பு தி God ‘s Delusion என்ற நூலை படித்த பொழுது கடவுள் பற்றிய எனது சிந்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது. நான் அந்த நூலை படித்த பின்பு என்னை நானே Agnostic என்ற பிரிவை சார்ந்தவன் என்று நம்ப தொடங்கினேன்.கடவுள் இல்லை, அற்புதங்கள் இல்லை கடவுளினால் பிரபஞ்சம் படைக்கப்படவில்லை அனைத்தும் தற்செயல் தான்.எதற்கும் கரணம் கிடையாது.நான் பிறந்தது எவ்வளவு தற்செயலான நிகழ்வோ அவ்வுளவு தற்செயலான நிகழ்ச்சி இந்த பிரபஞ்சம் தோன்றியதும்.மனிதனின் ஒழுக்கத்திற்கோ,அவனின் அறிவிற்கோ மதமும் தெய்வமும் காரணம் அல்ல. அவனது அக பரிணாம வளர்ச்சி சமுதாய வளர்ச்சி பற்றி anthropology சம்மந்தப்பட்ட அறிஞர்கள் பல காரணங்கள் முன் வைக்கிறார்கள்.melvin harris – இன் பசுக்கள் பன்றிகள் போர்கள் ,yuval noah harrari -இன் sapiens போன்றவை பெரும் பாய்ச்சலை என்னிடம் செய்தது .

இது போன்ற நூல்களை படிக்கும் பொழுது அவை தர்க்க ரீதியான அர்த்தத்தை கொடுக்கின்றன.நமது எண்ணமும் அதை ஏற்கிறது. ஆம் இறைவன் என்ற தனி ஆளுமை ஒன்று கிடையாது என்ற எண்ணம் வருகிறது.

நாம் இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அறிவியல் மற்றும் சமூகவியல் இவை சார்ந்த நூல்கள் யாவும் ஒவ்வொரு தனிமனிதனையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது கிடையாது.அவை மனிதன் என்ற ஒற்றை உயிரினத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை. வெறும் மனிதன் என்ற ஒற்றை உயிரினமாக வரும் பொழுது அந்த உயிரினத்தின் அகம் பற்றிய கருத்துக்கு இடமில்லை. ஏன் என்றால் தனி மனித அகத்தை அறிவியல் நிறுவ முடியாது. மேற்கத்திய அறிவியல் சொல்லும் இறை மறுப்பும் இந்திய ஆன்மிகமும் இங்கு தான் முரண் படுகிறது.

நமக்கு பல கடவுள்கள் அதே போல் நமது தத்துவ ஞானமும் பரந்து விரிந்தது.நமக்கு cannon கிடையாது.அதாவது நம் மதத்திற்கு ஆதாரமாக ஒரே ஒரு புத்தகத்தைசொல்ல முடியாது. நமக்கு ஞான மரபுகள் ஆறு, மதங்கள் ஆறு,

ஆனால் இதுவும் பத்தி அல்லது அர்ப்பணிப்பு ,கர்மம் மற்றும் தத்துவம்(ஞான மார்க்கம் ) மூலம் அணுகும் முறைகள். இவைகளை கடந்து இந்திய மண் முழுவதிலும் இருக்கும் குல தெய்வங்களின் எண்ணிக்கை பல ஆயிரம், வழிபாடு முறைகளும் அப்படியே.இத்தனை தெய்வங்களும் இந்து மதத்தின் அம்சங்களாக பிரம்மம் என்ற கருதுகோளின் மூலம் இணைக்க பட்டது.

நமது பெரிய மதங்களான சைவம் வைணவம் இவை தவிர்த்து பார்த்தால் இந்த குல கடவுள்களுக்கு கட்டுப்பட்ட மக்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா.இன்று என் போன்ற பட்டதாரிகள் என்ற வெற்று குப்பை மனிதர்களுக்கு இந்த குல ,தெய்வ வழிபாடு,கெடா வெட்டுவது ,சாமி வந்து ஆடுவது,அருள் வாக்கு சொல்வது இவை அனைத்தும் மூட நம்பிக்கைககள்.

இந்த யட்சிகள்,மாடசாமிகள்,அம்மன்கள்,நீலிகள்,சுடலை மாடன்கள் இவை இருப்பதற்கான அர்த்தம் எனக்கு தெய்வங்கள்,பேய்கள் தேவர்கள் படிக்கும் வரையில் தெரியவில்லை.இதற்கு பின்பு ஒளிந்திருக்கும் வரலாற்று பின்புலம் அது என்னை பற்றிய வரலாறு,எனது குருதியின் வரலாறு. எனது பாட்டன் நிச்சயம் ராஜ ராஜ சோழன் இல்லை, காலம் அவனின் வரலாற்றை எழுதுவதற்கு.அவனும் என்னை போன்ற பாமரன். இந்த தெய்வங்கள் எனது பரம்பரையின் வரலாற்றை என்னக்கு சொல்கிறது.இவ்வுளவு பெரிய செதில் புற்றில் ஒரு சிறிய கரையனின் பங்கை இந்த தெய்வங்கள் காட்டுகிறது.

அற உணர்ச்சியின் அடையாளங்களாய் இவை வெளிப்படுகின்றன.எதோ ஒரு தருணத்தில் இளைக்க பட்ட கொடுமைக்காக அந்த சமுதாயம் இறந்தவர்களை தெய்வங்களாக வழிபட்டு அறம் பிழைத்தமைக்கு ஈடு செய்துள்ளனர்.இந்த தெய்வங்கள் அந்த சமுதாயத்தின் மனசாட்சியில் நெருடல்களாக இருந்துள்ளனர்,இன்று நாம் அந்த அற உணர்ச்சி முற்றிலும் இழந்து விட்டோம்,இறைவன் வெறும் லௌகிக பொருள் தர வேண்டுவதற்க்காக மட்டுமே இருக்கிறார்.நமது சமுதாயம் தினமும் அற பிழை நிகழ்த்துகிறது ஆனால் அவை நம்மை சீண்டுவதே இல்லை.

எனது ஊரில் இருக்கும் தெய்வத்தின் பெயர் கிணற்றடி அம்மன்.அதன் கதை இது தான். சிவகாசி அருகில் இருக்கும் மண்குண்டான்பட்டி என்ற ஊரில் ஆறு அண்ணன் தம்பிகள் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை. வழக்கமாக தங்கை வயலுக்கு வருவதில்லை,அண்ணகள் முற்றத்து வெயில் படாமல் தங்கையை வளர்த்தனர்.ஒரு நாள் வயலில் வேலை செய்யும் பொழுது சகோதரகள் தண்ணீர் எடுத்துவர மறந்து விட்டனர்.இதை உணர்ந்த தங்கை அண்ணன்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் எடுத்து போயிருக்கிறாள்.இதை தூரத்தில் இருந்து பார்த்த சகோதரகள் தங்கை நமக்காக கஷ்டப்படுகிறாளே என்று தண்ணீர் குடத்தை வாங்குவதற்கு விரைகிறார்கள்.இதை பார்த்த தங்கை நாம் எதோ தவறு செய்து விட்டோம் அல்லது தாமதமாக வந்ததற்கு நமது அண்ணன்கள் நம்மைஅடிக்க வருகிறார்கள் என்று அஞ்சி அருகில் இருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து விடுகிறாள்.அந்த நீர் இரத்தமாக மாறுகிறது.அந்த கிணற்றின் மேல் ஒரு சிறு கல்லை நட்டு தங்கையின் ஆத்மா சமாதானம் அடைவதற்காக பலியும் பூசனையும் செய்கிறார்கள்.இந்த சகோதரர்களின் குடும்பம் நாயக்கர் ஜாதியை சார்ந்தது,அவர்களால் அந்த மண்ணில் அந்த சம்பவத்திற்கு பிறகு இருக்க முடியவில்லை,அப்பொழுது புலம் பெயர்ந்து வந்த ஒரு ரெட்டி குடும்பத்திடம் நிலத்தை கொடுத்துவிட்டு அவர்களின் தங்கைக்கு வருடம் தோறும் பலியும் பூசனையும் செய்யும் படி கேட்டு கொள்கிறார்கள்.அன்றில் இருந்து அந்த ஊருக்கு பல ரெட்டியார் குடும்பங்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.அவர்கள் அந்த அம்மனை குல தெய்வமாக ஏற்று வருடம் தோறும் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.இறந்துதது குழந்தை என்பதனால் அங்கு கரும்பு பந்தல் குழந்தைகளுக்கு போடப்படுகிறது. தங்கையின் மீது உள்ள தீராத பாசம் கொண்ட அண்ணன்கள்,அவளின் இறப்பை ஒத்துக்கொள்ள விரும்பவில்லை ,அந்த துயரமம் நம்மை மீறிய ஒன்று. அதன் பொருட்டே மகத்துவமானது,இறை வடிவானது.

புலம் பெயர்ந்த எனது மூதாதையருக்கு நிலம் கொடுத்து வாழ்வு கொடுத்த அந்த அண்ணகளின் தெய்வம் எனது தெய்வமும் கூட. அந்த ஆறாத துயரத்தை அற்று படுத்த நாங்கள் பூசை செய்யிதே ஆகவேண்டும். நான் இன்று எவ்வுளவு வசதியாக வாழ்ந்தாலும் அதற்கான வேர் அங்கிருந்தே பெற பட்டது.நான் உயரத்தில் நிற்கவில்லை எனது மூதாதைகளின் தோள்களின் மேல் நிற்கிறேன் அதனால் நான் உயரத்தில் நிற்பதாக உணர்கிறேன்.இன்று என்னால் எனது அப்பாவின் கண் மூடித்தனமான பக்தியை உணர முடிகிறது.அந்த துயரம் என்னை பாதித்து நானும் சன்னதம் கொண்டு ஆடுவேன் என்று தோன்றுகிறது .என்னால் இதை richard dawkins -இடம் நிரூபணம் பண்ண முடியாது.

ஆனால் எனக்கு அறிவியல் சொன்ன பாதையை விட எனது இந்த புரிதல் மிகவும் திருப்தியூட்டுவதாக இருக்கிறது.என்றும் எனது ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றிகள்.

ராம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (14-Sep-18, 5:04 am)
பார்வை : 124

மேலே