மன்மத ரகசியம்-------------மருத்துவர் நாராயணரெட்டி ----------தொடர் 2

இப்படி எத்தனையோ கேள்விகள். ‘ஒரு பெண்ணின் அந்தரங்க பாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்... அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்... சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவு கொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்’ என்றெல்லாம் கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதிய அந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம் படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம். ஒன்று ‘பிஸியாலஜி’உடலில் எந்தெந்த பாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது! இரண்டாவது ‘பேதாலஜி’ நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களே டாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பான நோய்களில், சிக்கல் இந்த அடிப்படை விஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவை பற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும். அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

பல டாக்டர்கள் இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்து வந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்று ஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி! மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ் பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இது ‘மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல் சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று ‘செக்ஸாலஜி’ என்ற பெயரில் நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும் செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி பிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய் சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வு தேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

ஒரு காலத்தில் ‘மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது’ என்று உலகம் முழுக்க எல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. ‘விதையில் எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதை பொய்த்துப் போகிறது’ என்று இதை நாசூக்காக சொன்னார்கள்.

அரியணைக்கு வாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாப சம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னை மகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும் மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, யாருடனாவது சேர்ந்து தப்பு செய்து ‘இளவரசனை’ப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்ப புரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்து விடுவான்.

ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள். குழந்தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சை அவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.

ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த "படுக்கை அறை" ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்கு திறவுகோலாக அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து மூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள் ‘மலடி’ என்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்து அம்மா வீட்டில் காலம் முழுக்கக் கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தான புண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.

அந்தப் படுக்கை அறை இரண்டு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை. அதற்குகள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்கன்ட்ரோல் ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியே இருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உகள்ளே இருக்கும் ஜோடிக்கு இந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.

உள்ளே நுழையும் ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களது நாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தை அளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும் மாற்றங்களை அளக்க ‘எலெக்ட்ரோ என்ஸஃபைலோ கிராம்’ எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட்டர் என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி... இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன. இவற்றை ‘சுகமான சுமைகளாக’ கருதியபடி அவர்கள் இயல்பாகத் தங்களுக்குகள் கலந்தார்கள்.

மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்கு அத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது? ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன. அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும் மாற்றங்கள்? அதைக் கண்காணிக்கவும் ஒரு ஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாக பிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன் உள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செயற்கை உறுப்பை வைத்து சில பெண்கள் சுய இன்பம் அனுபவிக்க, அதற்குகள் இருந்த காமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும் பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.

மிகச் சாதாரணமான ஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? ‘அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்’ என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. கொஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேள்விக்குறி ஆகும் நிலை உண்டானது.

ஆனாலும் ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்து முடித்தார், வில்லியம் ஹோவெல் மாஸ்டர்ஸ்.

சரி... எப்படி இத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?


சிவா

எழுதியவர் : (14-Sep-18, 6:28 pm)
பார்வை : 47

மேலே