வாழ்வா தாழ்வா

பிறர்வாடிட வாழ்வது வாழ்வென்ன வாழ்வோ?
பிறர்வளர்ந்திட வாழ்வதில் தாழ்வென்ன தாழ்வோ?
பிறக்கையில் என்ன பொருளோடு வந்தோம்?
புறப்படும்போது எப்பொருள் கொண்டு செல்வோம்?
பிறப்போர் தமக்கே வாழ்வது பாதி!
பிறரைக் காக்க வாழ்வது மீதி!
இயன்றால் உலக இன்னல் களைவோம்!
இருக்கும் வரையில் இனியவை செய்வோம்!
முயன்றால் உலகம் முழுவதும் இனிமை!
முரன்பா டென்றால் உலகமே தனிமை!

எழுதியவர் : கவி இராசன் (15-Sep-18, 12:17 am)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 126

மேலே