முடியாத காலை

விடியாத காலையின் முடியாத தூக்கத்தில்
கண்களை திறந்தும் திறவா உன் முகம் பார்த்தேன்

இருட்டிய அறையில் திருடன்
போல் எங்கிருந்தோ வந்த ஒளி
உன் கண்களை மட்டும் கூசாமல்
முகத்தில் தூங்கிக்கொண்டே என்னை
பார்க்க சொன்னது

பகலில் நீ ஒளித்து வைத்திருந்த
செழித்த அழகை இருள்
திருடிக்கொண்டு போவதை தடுக்காமல்
ரசித்தேன்

என்னை சுற்றி வந்த புரிகுழல்
அழகியின் சில முடிகள் களைந்ததும்
தென்றல் வந்து தொட்டுச்சென்று
என்னை பொறாமையின் உச்சத்திற்கு
கொண்டு சென்றது

இனியும் இரவு தீண்டுவதை பார்க்க முடியாமல் இரவை விரட்டி சூரியன்
சுடுவதற்குள் அவள் நெற்றியில்
உஷ்ணம் கலந்த முத்தம் கொடுத்தேன்
பகலும் தொடங்கியது முத்தங்களால்
தேனீரும் தேவையின்றி போனது

எழுதியவர் : மெ.மேக்சின் (15-Sep-18, 1:26 pm)
Tanglish : mudiyaatha kaalai
பார்வை : 198

மேலே