மொட்டைக் கடிதம்

மொட்டைக் கடிதம்


முகவுரை
மன நோயாளிகள் தம்மை வெளிக் காட்டால் மொட்டை கடிதம் எழுதி ஒருவர்மேல் உள்ள தம் கோபத்தை தீர்த்துக் கொள்வார்கள் இவர்கள் கோழைகள். கடிதம் கிடைத்தவர் மனம்., முகம் எப்படி மாறுகிறது என்பதை கடிதம் அனுப்பியவர் கேட்டோ கண்டோ அனுபவிப்பார்கள் இன்னும் சிலர் தம்மால் சாதிக்க முடியததை மொட்டை கடிதம் எழுதி மன திருப்தி அடைவார்கள். அவர்கள் “முகம் இல்லாத ஜீவன்கள்”
அதிகமாக மொட்டை கடிதங்கள் போகும் இடம் குப்பைத் .தொட்டி சில சமய தூஷண வார்த்தைகளில் கடிதம் எழுதப்பட்டிருக்கும் . அதுவே மன நோயாளி ஒருவரால் எழுதப்பட்டது என்பதுக்கு எடுத்துக்காட்டு இந்த மொட்டைக் கடிதத்தை எவர் எழுதினார்? எதற்காக எழுதினார்? என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிப்பது மடமை. வேலை செய்யும் இடத்தில பிரச்சனைகள் இருந்தால் மொட்டைக் கடிதங்களை எதிர் பார்க்கலாம். இவர்கள் மர்மக் கதை எழுதும் எழுத்தாளராக வர முயற்ச்சிப்பவர்கள் . அவர்கள் மேல் சிலர் அனுதாபப் பட்டு கடிதம் எழுதிப் பழகட்டும் என்று விட்டுவிடுவார்கள் . ஆனால் இந்த கதை சற்று வேறு பட்ட துப்பு துலங்கும் கதை
***
ரேவதி எல்லோரையும் பிரமிக்க வைக்கும் திருமணமாகாத அழகி. செல்வந்தரின் மகள். தொழில் நுட்பத் துறையில் எம் எஸ் சி (M.Sc) பட்டம் பெற்ற பட்டதாரி. எதையும் நுண்ணியமாக ஆராய்பவள்.. கண்டிப்பானவள். .சென்னையில் , தனியார் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக (Project Manager) இருக்கும் அவளின் கீழ் மாதவன், சுந்தரம், மோகன், செல்வம் . பாஸ்கர் , ரமேஷ் ஆகிய ஆறுபேரும் வேலை செய்தனர் . அந்த ஆறுபேரில் மாதவன் வேலையில் கெட்டிக்காரன் அதிகம் பேச மாட்டான் ஆங்கிலம் சரளமாக பேசுவான் மற்றவர்கள் அறுவரில் செல்வதுக்கு கையால் திட்டம் சம்பத்தப்பட அறிக்கை எழுதத் தெரியாது சுந்தரம் ஒரு வைத்தியர் போல் கிறுக்கி எழுதுவான். வாசிப்பது கடினம், ஆனால் பிழைகள் இல்லாமல் எழுதுவான் , சிகரட் குடிக்கும் மோகன் எழுதும் தமிழில் எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கும் .
ரமேஷ் முத்து போன்று எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதுவான். அவனுக்குத் தமிழ் எழுதவராது மூம்பாயில் பிறந்த பாஸ்கருக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும்.. அவனுக்கும் தமிழ் எழுதவும் பேசவும் வராது

ரேவதி அவள் மனதுக்குள் மாதவனை விரும்பினாள். அவளுக்கு மாதவன் செய்யும் வேலையில் அதிக நம்பிக்கை. மாதவனைத் தவிர்த்து மற்றவர்கள் எழுதிய அறிக்கைகளில் பல தடவைகள் பிழை கண்டு பிடித்து திருத்தி இருக்கிறாள் . அதோடு கொடுத்த வேலையே குறித்த நேரத்துக்குள் செய்து அவர்கள் முடிக்காதவர்கள். .
அலுவலகத்தில் ரேவதி தங்களை விட மாதவனை பாகுபாடு காட்டி, உயர்வாக மதித்து, சம்பள உயர்வுக்கு மேலிடத்துக்கு சிபார்சு செய்ததால் அவனுக்கு மட்டும் மற்றவர்களை விட சம்பளம் அதிகம் கிடைத்தது. அதனால் அவர்கள் ரேவதி மாதவனை காதலிப்பதாக நினைத்து ரேவதி- மாதவன் ஆகிய இருவரையும் இணைத்துப் பல விதமான வதந்திகள் பேசினார்கள்.
ஒரு நாள் ரேவதிக்கு அவளின் அலுவலகத் தபால் பெட்டிக்குள் ஒரு கடிதம் இருந்தது அந்தக் கடிதக் கவரில் ஆங்கிலத்தில்
“ For the immediate attention of Revathy “ (ரேவதியன் உடனடி கவனத்துக்கு ) என்று எழுதி இருந்தது ரேவதி கவரில் இருந்து கடிதத்தை எடுத்து பிரித்து வாசித்தாள் அதில் பின் வருமாறு தமிழில் எழுதியிருந்தது

ரேவதிக்கு உன்னில் அக்கறை கொண்வர்கள் எழுதுவது
உனக்கு மாதவனை விட வேறு ஒருவன் காதலிக்க கிடைக்கவில்லைய?” நீயோ ஒரு உயர் சாதி, நகரத்தில் பிறந்து படித்த பென். அவனோ ஒரு தலித் சாதி. அதோடு ஏற்கனவே ஒரு பஞ்சாபி பென்னை மூம்பாயில் திருமனம் செய்தவன் அவனின் முதல் மனைவி அவன் ஆன்மை இல்லாதவன் என்பதால் விவகரத்து செய்தவள் . நீ அவனை திருமனம் செய்தால் உனக்கும் அந்த பஞ்சாபி பென்னின் கதி தான் . நீயோ ஒரு பட்டனத்துப் பென். அவனோ பெயர் தெரியாத கிராமத்தில் பிறந்தவன் . நீ அவனை மறந்து விடு..
இப்படிக்கு
உண் நலம் விரும்பிகள்

கடிதத்தை வாசித்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது ஒன்பது எழுத்துப் பிழைகள் அந்த கடிதத்தில் இருந்தன அந்த பிழைகளுக்கு சிவப்பு நிற மையால் கோடிட்டாள். யார் அந்த மொட்டைக் கடிதத்தை எழுதியது என்று அவளுக்குப் கண்டு பிடிக்க வெகு நேரம் எடுக்கவில்லை. அவள் குப்பைத் தொட்டிக்குள் அக் கடிதத் கிழித்துப் போடாமல் நேரே தன் உயர் அதிகாரி நடராஜாவின் அறைக்குள் கடிதத்தோடு சென்றாள்.
***
:” என்ன ரேவதி எதாவது வேலையில் பிரச்சனையா”? ராஜா கேட்டார்
“ வேலையில் எனக்கு பிரச்சனை இல்லை சேர் .”
“ அப்போ என்ன பிரச்சனை”?
:”எனக்குக் கீழ் வேலை செய்யும் ஆறு பேரில் இருவரால் தான் பிரச்சனை . முதலில் என் பெயருக்கு வந்த இந்த மொட்டைக் கடிதத்தை வாசித்துப் பாருங்கள்.”, தனக்கு வந்த கடிதத்தை தனது அதிகாரி ராஜாவிடம் ரேவதி கொடுத்தாள்
ராஜா கடிதத்தை வாசித்து விட்டு.

“என்ன ரேவதி கடிதத்தில். எழுத்துப் பிழைகளுக்கு கீழ் சிவப்பு நிற மையால் கோடிட்டு இருக்கிறது . “
“அது நான் இட்ட சிவப்புக் கோடுகள் . அது தான் யார் இதை எழுதினது என்று கண்டு பிடிக்க உதவியது”
“யார் இந்த மொட்டைக் கடிதத்தை எழுதினது என்று கண்டு பிடித்தீரா”? :
“ எஸ் சேர்”:
“ யார், எழுதியது என்று கண்டு பிடித்தீர் ” ?
“ திருடன் எப்போதும் ஒரு துப்பை விட்டுச் செல்வான் . அந்த துப்பை வைத்து திருடனை கண்டு . பிடிக்கலாம்”
“ இந்த கடிதத்தில் உள்ள எழுத்துப் பிழைகளை அடையாளம் கண்டு இருக்கிறீரே”.:
“அது தான் துப்பு. அதோடு இந்தக் கடிதத்தை எழுத;ப் பாவித்த
Hammermill பிராண்ட் பிரீமியம் பலதுக்கும் பாவிக்கும் பெப்பரை பாருங்கள்: கவரில் உள்ள அழகிய ஆங்கில எழுதுக்களையும் பாருங்கள்.
ராஜா கடிதத்தை பார்த்தபின் :”இதென்ன சிகரெட் வாசனை வீசுகிறது ” யாராவது சிகரெட் குடிப்பவர் தமிழ் சரியாக எழுதத் தெரியாதவர் எழுதிய கடிதம் போல் இருக்கு நான் நினைப்பது சரியா :”? :
ரேவதி சிரித்தபடி “ நீங்கள் சொல்வது சரி சேர் இந்தத் துப்புகள் எனக்கு மொட்டைக் கடிதம் எழுதினவர்களை காட்டிக் கொடுத்து விட்டது”
“சற்று விளக்கமாய் சொல்லும்”
“எனக்கு கீழ் வேலை செய்யும் அறுவரின் குறை நிறைகளையும்,, குணங்களையும் நான் நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் ஆறு பேரையும் தனித்தனியாக நீங்கள் அழைத்து ஒரு பேப்பரில் நான் இந்த மொட்டை கடிதத்தில் சிவப்பு மையில் கோடிட்ட வார்த்தைகளையும் கடித உறையில் ஆங்கிலத்தில் எழுதியதையும், எழுதச் சொல்லுங்கள் . அவர்களுக்குக் காரணம் சொல்ல வேண்டாம் அதன் பின் இந்த கடிதத்தில் உள்ள எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ,யார் இந்த மொட்டடைக் கடிதத்தை எனக்கு எழுதியவர்கள் என்று அறிவீர்கள். அவர்களுக்கு கடிததைக் காட்டவேண்டாம். நான் அவர்கள் எழுதும் போது உங்கள் அறையில் இருக்கப் போவதில்லை “
“நல்ல யோசனை. அது படியே செய்கிறன்” என்றார் அதிகாரி நடராஜா
***
அதிகாரியின் எழுத்துப் பரிசோதநனை முடிந்த பின் “ரேவதி நீர் சொன்ன படி இக்கடிதம் எழுதியவர் யார் என்று கண்டு பிடித்துவிட்டேன். அதோடு அவர்கள் கடிதம் எழுதப் பாவித்த கடித உறையும் பேப்பரும் நம் அலுவலகத்தில் அறிக்கைகள் எழுதப் பாவிக்கும் பேப்பர். அது பெரும் குற்றம் ரேவதி”
இனி உங்கள் முடிவு என்ன சேர்
ன்ன சொல்வது சரிய எமபத்யி அவர்களை பற்றி அறிந்த நீர் முடிவு சொல்ல வேண்டும் எழுத்துப் பிழைகளோடு தமிழில் எழுதியவர் மோகன் : அவர் தான இந்தக் கடித்தை எழுதி இருக்கவேண்டும். அவர் சிகரெட் குடிப்பவர் என்று எனக்குத் தெரியும் ஆங்கிலத்தில் அழகிய எழுத்தில் கவரில் எழுதியவ்ர் ரமேஷ் . இந்த மொட்டை கடிதத்தை இருவரும் சேர்ந்து எங்கள் அலுவலகத்தில் பாவிக்கும் Hammermill பிராண்ட் பிரீமியம் பேப்பரில் இருகிறார்கள்”:
“முற்றிலும் சரி சேர். இனி தகுந்த நடவடிக்கை எடுங்கள் சேர்”
“இவர்கள் இருவரையும் வேலையில் இருந்து நீக்கவும் . அல்லது சம்மபளம் இல்லாமல் ஒரு மாதம் தற்காலிகமாக வேலையில் நிறுத்தவும் என் முடிவு”.
இது அவர்களின் முதல் குற்றம் என்பதால் வேலையில் இருந்து இருவரையும் தற்காலிகமாக ஒரு மாதச் சம்பளம் இல்லாமல் நிறுத்துங்கள். அடுத்த முறை அவர்கள் ஏதாவது குற்றம் செய்தால் வேலையில் இருந்து நீக்கி விடுங்கள்”: ரேவதி சொன்னாள்.
ராஜ் உடனே தன் செக்கரட்டரியை அழைத்து ரமேஷ், மோகன் இருவருக்கும் ஒரு மாதச் சம்பளம் இல்லாமல் தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தும் ஆணையிடும் கடிதத்தை மொட்டை கடிதம் எழுதியதுக்கும் அலுவலக பேப்ரை கடிதம் எழுதப் பாவித்ததுக்கும் ஆகிய இரு குற்றங்களை சுட்டிக் காட்டி இனியும் இது போல் குற்றங்கள் செய்தல் வேலையில் இருந்து நிறந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று குறிபிட்டு கடிதம், ஒன்றை
தயாரித்து, தான் கையழுத்துப் போட கொண்டு வரும்படி அதிகாரி நடராஜா சொன்னார். அந்த மொட்டைக் கடிததின் பிரதிகளை அவர்கள் இருவரினதும் தனிப்பட்ட கோப்புக்குள் (Personal File) வைக்கும்படியும் சொன்னார்..
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (15-Sep-18, 4:56 pm)
பார்வை : 294

மேலே