கை நாட்டு கபோதி உயில்

வெட்ட வெளி சந்தை
பூர்வீக மக்களுக்கு சொத்துடமை வருவிக்க
விடுதலை பசி ஏற்றியது முன்னுரிமை கொட்டாவி !
இது கருணைக் கடல் இந்தியனுக்கு தொத்திக் கொண்டது....
உரிமையை கேட்டுப்பெற தெம்பு வேண்டுமே !
யாரிடம் கேட்பது ?
கல்விக்கரசி கடன் பட்டதால்..
செல்வ இலெட்சுமிக்கு பாமாலை விழுகிறது !
வீரலெட்சுமி அதிகாரம் ஆண்டாண்டு நீடிக்க....
கதவை தொங்கிக்கிட்ட கைநாட்டு ...
பல காலம் வருத்தப்படாது போனதனால்
துணிச்சல் துவண்டு துயில் காணுது ,,,
தூர நோக்கு சிந்தனை சிற்பி தூக்கம் களைய
சில்லரைக்கு கல்லரை கட்டியாச்சு ..
ஆளுக்கு ஆள்..
நேருக்கு நேர்...
கபடி கண்ணோட்டம் பெருக்கெடுக்க ...
தீபகற்பம் பல்லக்கு சுமக்கிறது !
நாட்குறிப்பு நாழிகையை நகர்த்த ...
கை நாட்டு கபோதி மீண்டும் கடன் பட
கையொப்ப காகிதத்தை கழுதைக்கு
கை காசுவிற்கு எழுதிக்கொடுக்கவே
செத்து தவிக்கும் உயில் .....
பின் விளைவு பாதிப்பை பதிவு செய்கிறது .
சதுரத்தில் இழைத்த தவறு தாவகம் ஏற்க !

எழுதியவர் : (16-Sep-18, 10:56 pm)
பார்வை : 29

மேலே