ஹைக்கூ

இலவச பொருட்கள்
ஐந்து வருடத்திருவிழா
உரிமை விற்கப்பட்டது...

ஏழைகள் வாழ்வில்
வயிற்றில் நெருப்பு
அடுப்பில் ஈரம்...

காற்றுக்கும் கைகள்
கதவை திறந்து மூடுகிறது
ஆடிமாதம்...

குப்பைத்தொட்டியில்
குழந்தையும் நாயும்
சமத்துவம் ஓங்குகிறது...

ஏரியில் பள்ளம்
ஆற்றில் பள்ளம்
நகரத்தில் அடுக்குமாடிகள்..

அழுதிடும் குழந்தை
தேற்றிடும் நகர்புற தாய்
பாலூட்ட வசதியில்லா ஆடை...

அடிவயிற்று நெருப்பு
இடம் மாறியது
மகளுக்கு திருமணம்...

ஆடம்பர இராஜன்
அதீத சுற்றுலா செலவு
ஒளிர்கிறது நாடு...

ஐந்து வருடம் ஒருமுறை
விவசாயிகள் மகிழ்ச்சி
கடன் தள்ளுப்படி...

தொடர் மழை
ஊரெங்கிலும் வெள்ளம்
பசித்தீர்க்காத பணம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Sep-18, 4:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 514

மேலே