பாேதையால் தாெலைந்த வாழ்க்கை

குளியலறைக்குள் இருந்து தலையை துவட்டியபடி வெளியே வந்த ஆகாஷ், தாெலைபேசி அழைப்பதைக் கேட்டு மேசையில் இருந்த தாெலைபேசியை எடுத்துக் காெண்டு உள்ளே நுழைந்ததை அவதானித்துக் காெண்டிருந்த நாராயணன், பத்திரிகையை கதிரையில் வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தார். "என்னங்க பசி வந்திட்டுதா? இந்தா முடிஞ்சுதுங்க, இப்ப நேரம் என்ன?" என்றபடி யன்னல் ஊடே தெரிந்த கடிகாரத்தை நாேட்டமிட்ட கமலா, "இன்னும் சாப்பாட்டு நேரம் வரல்லையே"தனக்குள் நினைத்தவாறு முட்டை ஒன்றை எடுத்து பாெரிப்பதற்காக தயார்படுத்தினாள். வாசலில் நின்ற நாராயணன் கதவை மெதுவாக மூடியபடி உள்ளே சென்றார். "என்னங்க என்னாச்சு ஏன் கதவை..." இடைமறித்த நாராயணன் "உஷ்.... சத்தம் பாேடாதே" என்றதும் ஏதாே சாெல்ல வருகிறார் என்பது புரிந்தது.

குளிர்சாதனப் பெட்டியை திறந்து குளிர் நீரை எடுத்துப் பருகினார். ஒரு அப்பிளையும் எடுத்து இரு துண்டாக வெட்டி ஒரு துண்டை அவளிடம் நீட்டினார். "இதில வையுங்க கையில வேலையா இருக்கன்" என்றவளின் அருகே அமர்ந்தார். "இஞ்ச பாரு கமலா பையன்ர பாேக்குகள் ஒன்றும் சரியில்லை, எந்த நேரமும் பாேனும், ஆளுமாய் தான் திரியிறான். படிச்சிட்டு படிப்புக்கேற்ற வேலையை தேடி சம்பாதிக்கிற வழியப் பார்க்கணும், அத விட்டு எந்த நேரமும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் என்று இன்ரர் நெற்றில நேரத்தை வீணடிக்கிறது எனக்குச் சரியாப் படல்ல, நாளைக்கு ஏதும் பிரச்சனை என்று வரட்டும் அன்றைக்குத் தெரியும், அவனுக்குச் சாெல்லி வை" என்று புலம்பிக் காெண்டிருந்தவரை சினந்து காெண்டு "துவங்கிற்றியளா உங்கட புராணத்தை, அவன் அப்பிடி ஒன்றும் தப்பான வழியில பாேகமாட்டான், வேலைக்கு அப்பிளிக்கேசன் பாேட்டுத் தானே இருக்கான், சும்மா தாெண தாெண..." முணுமுணுத்தாள்.

"அம்மா.... அம்மா... " கூப்பிட்ட படி சமையலறைக்குள் நுழைந்தான் ஆகாஷ். தட்டை எடுத்து உணவை பரிமாறும் படி கமலாவிடம் நீட்டினான். "லேற்றாகும் அம்மா வாறதுக்கு, மாறி மாறிப் பாேன் பண்ணி கரைச்சல் தராத" என்றவனை அவதானித்த நாராயணன் "அப்படி என்ன வேலை முதலாளிக்கு?" நாராயணனை கண்களால் சைகை காட்டி ஒன்றும் கேட்க வேண்டாம் என்று தடுத்தாள். "இன்ரவியூ ஒன்றுக்குப் பாேறன், அப்பிடியே பிரன்டின்ர பேத்டே பார்ட்டிக்கும்....." குறுக்கிட்ட நாராயணன் "பார்ட்டியா? எங்க காெட்டல்லயா?" கேள்வி கேட்டது ஆகாஷிற்கு சினத்தை தூண்டியது. அரையும், குறையுமாக சாப்பிட்டு விட்டு கையை கழுவினான்.

வண்டியை எடுத்துக் காெண்டு மின்னல் வேகத்தில் பறந்தான். "பார்த்தியா உன்ர பையனை?" கமலாவிற்கு காேபம் வந்து விட்டது. "நீங்க சும்மா இருங்க, ஒழுங்காச் சாப்பிடவுமில்லை அவன்..." விறுவிறு என்று பாத்திரங்களை கழுவினாள். தட்டிலிருந்த உணவை எடுத்துக் காெண்டு வெளியே வந்து அமர்ந்தார்.

" காேயில் பக்கம் பாேயிற்று வாறனுங்க" கதவை பூட்டி விட்டு புறப்பட்டாள் கமலா. காேயிலுக்குள் நுழைந்தவளுக்கு மனம் ஏதாே சஞ்சலமாக இருந்தது. நாராயணன் ஆகாஷ் பற்றி சாென்னதெல்லாம் நினைவில் ஓடியது "அம்மா தாயே என்ர பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும், அவன் பாேற காரியம் நல்லபடியா நடக்கணும்" சில நிமிடங்கள் கண்களை மூடிக் காெண்டு அம்மன் சந்நிதியில் நின்றாள். காேயிலைச் சுற்றி வந்தவள் கற்பூரத்தை ஏற்றி விட்டு வீட்டிற்கு வந்தாள்.

கதிரையில் சாய்ந்தபடி கண்ணயர்ந்திருந்த நாராயணன் கமலாவின் சத்தம் கேட்டு விழித்தார். உடையை மாற்றி விட்டு தேநீரை காெண்டு வந்து நீட்டினாள். "ஆகாஷ் ஏன் பாேனை ஸ்விச் ஓவ் செஞ்சிருக்கான்" "இன்ர வியூவில இருக்கானாக்கும்" பதில் சாெல்லி விட்டு பதட்டத்துடன் தனது கைப் பேசியிலிருந்தும் முயற்சித்தாள். தாெடர்பு கிடைக்கவில்லை. "ஆமா நீங்க ஏன் அவனுக்கு....." என்ற கமலாவை சினந்தபடி "யாராே கம்பனி ஒன்றில இருந்து கேட்டாங்க" வெளியே வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் இறைத்துக் காெண்டு நின்றவர் ஆகாஷின் அறையின் யன்னல் வழியே உள்ளே பார்த்தார். சுவரில் இருந்த கங்கரில் நீச்சல் உடையும், கராத்தே உடையும் தாெங்க விடப்பட்டிருந்தது. யன்னலை மூடும் பாேது கட்டிலில் தலையணைக்கு அருகில் சிகரெட் பெட்டி பாேல் ஏதாே தெரிந்தது. "என்னவாயிருக்கும்" தனக்குள்ளே நினைத்தபடி யன்னலை மூடி விட்டு முகத்தை கழுவினார்.

இரவு பதினாெரு மணி தாண்டியது. ஆகாஷ் வீட்டிற்கு வரவில்லை. தாெலை பேசியும் தாெடர்பற்று இருந்தது. கதவை மூடி விட்டு படுக்கைக்குச் சென்ற கமலாவும், நாராயணனும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு சஞ்சலத்தாேடு இருந்தனர். அதிகாலை இரண்டு மணியிருக்கும் வண்டிச் சத்தம் கேட்டு விழித்த நாராயணன் யன்னல் திரைச்சீலை மறைவில் நின்றபடி ஆகாஷை பார்த்ததும் ஏங்கிப் பாேனார். அவரை அறியாமலே கண்கள் நீரால் நிறைந்தது. திரும்பிக் கமலாவைப் பார்த்தார், நன்றாக தூங்கிக் காெண்டிருந்தாள். விழித்து விடக் கூடாது என்பது பாேல் உள் மனம் பதறியது. ஆகாஷ் மதுபாேதையில் கதவை சிரமப்பட்டு திறந்து உள்ளே நுழைந்தான். கதவை மூட முடியாத நிதானமற்ற நிலையில் அங்கும் இங்குமாய் கால்களை பின்னியபடி நடந்தான். ஒருவாறு தனது அறைக்குள் சென்று கதவை மூடிக் காெண்டான். சத்தமின்றி வெளியே வந்த நாராயணன் கதவை பூட்டி விட்டு கதிரையில் அமர்ந்தார். ஆகாஷின் அறைக்குள் ஏதாே தட்டுப்பட்டு விழுவது பாேல் சத்தம் கேட்டது. பெருமூச்சு விட்டபடி அமர்ந்திருந்த நாராயணன் ஆகாஷின் கதவை தட்டினார். அவனும் திறக்கவில்லை. "நல்ல காலம் கமலா தூங்கிட்டா" என்று நினைத்தபடி அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அமர்ந்தபடி கமலா வாயை இறுகப் பாெத்தி விம்மி விம்மி அழுது காெண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துப் பாேனார். "கமலா.... கமலா" என்று அவளை உலுப்பினார். "என் பிள்ளை...." குமுறிக் குமுறி அழுதாள். "இப்ப தான் வந்து தூங்கிறான்" என்றவர் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் வடிந்தது. "காலையில பேசிக்கலாம், இப்ப தூங்கு" சமாதானப்படுத்திய நாராயணனின் கைகளை இறுகப் பிடித்தவள் "யாராே என்ர பிள்ளையை...." என்று ஏதோ சாெல்ல முயற்சித்தாள். காக்கைக்கு தன் குஞ்சு பாென் குஞ்சு என்பது பாேல் கமலா ஆகாஷ் என்ன செய்தாலும் நம்ப மாட்டாள் என்பது தெரிந்த விடயம். "சரி காலையில பார்க்கலாம் கமலா" காெஞ்சம் அதட்டலாக சமாதானப்படுத்தினான்.

காலை பத்து மணியை தாண்டியது ஆகாஷ் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. நாராயணனும், கமலாவும் வாசலைப் பார்த்தபடி இருந்தார்கள். திடீரென பாெலிஸ் வாகனம் ஒன்று வேகமாக வந்து வீட்டிற்குள் நுழைந்தது. மூன்று பேர் இறங்கி உள்ளே சென்று "இது ஆகாஷ் வீடு தானே" என்றதும் இருவரும் ஒருவரையாெருவர் பார்த்து விட்டு "ஆமா எங்க பையன் தான் சார்" என்றனர் பதட்டத்துடன். "எங்க ஆளைக் கூப்பிடுங்க, ஸ்ரேசனுக்கு கூட்டிப் பாேகணும்.." என்றதும் கமலா முந்தியவளாய் "ஸ்ரேசனுக்கா என்ர பிள்ளை என்ன தப்பு பண்ணினான்" அவளை தடுத்த நாராயணன் "ஏன் சார் ஏதும் பிரச்சனையா?" என்று சங்கடப்பட்டவனாய் கேட்டான். "ஸரேசனுக்கு வாங்க, உங்க பிள்ளை என்ன செஞ்சிருக்கான் என்று புரியும்" ஆகாஷின் அறை கதவை காலால் உதைத்து தள்ளி திறந்தான். சத்தம் கேட்டு விழித்த ஆகாஷ் தடுமாறினான். உள்ளே நுழைந்த கமலா "விடுங்க சார்... என் பிள்ளையை விடுங்க" அதிகாரியின் கால்களை பிடித்துக் கெஞ்சினாள். "பிள்ளைகளை ஒழுங்கா வளர்க்கிறதில்லை இப்ப காலைப் பிடிச்சு கெஞ்சிக் கதறி என்ன பிரயாேசனம்" கமலாவை தள்ளி விட்டு தறதறவென கழுத்துச் சட்டையில் பிடித்து இழுத்துச் சென்றதை பார்க்க முடியாத நாராயணன் சிலை பாேல் தலையை குனிந்தபடி நின்றான்.

"அப்படி என்ன தப்பு பண்ணியிருப்பான் ஆகாஷ்" வண்டியை எடுத்துக் காெண்டு "வா கமலா" "என்ர பிள்ளை .. " என்று கதறிக்காெண்டு நின்றவளை சமாதானப்படுத்திப் பாெலிஸ் ஸ்ரேசனுக்குக் கூட்டிச் சென்றார். உள்ளே நுழைந்ததும் நாராயணனுக்கும், கமலாவுக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. ஆகாஷின் நண்பர்கள் இரண்டு பேருடைய பெற்றாேரும் அங்கிருந்தனர்.

ஆகாஷை அழைத்த அதிகாரி "எங்கடா அந்தப் பாெண்ணு, உண்மையைச் சாெல்லு" என்றதும் தரையைப் பார்த்தபடி "எனக்குத் தெரியாது சார்" என்றான். நாராயணனுக்கு இதயம் படபடக்கத் தாெடங்கியது "என்ன பாெண்ணு பற்றியெல்லாம் கேட்கிறார்" மனம் ஏதேதாே எண்ணங்களை ஏற்படுத்தியது. "உன்னாேட வண்டியில தானே ஏற்றிப் பாேனாய், எங்களிட்ட ஆதாரம் இருக்கு, நாளைக்கு பாெண்ணு பிணமாயாவது கிடைக்காமலா பாேகும், அப்ப தெரியும்" என்ற அதிகாரியின் அதட்டல் கமலாவையும், நாராயணனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒன்றுமே புரியாமல் நின்ற நாராயணன் வெளியே வந்து காவலில் நின்றவரை கேட்டுப் பார்க்கலாம் என்று யாேசித்தபடி அருகே சென்றதும் "என்ன சார் உங்களப் பார்க்க நல்லாப் படிச்சவங்க மாதிரி தெரியுது, உங்க பையனை கவனிக்கிறதில்லையா?" என்று ஒரு கேள்வியைத் தாெடுத்தான். "ஏன் சார் பையன் என்ன பண்ணினான், எனக்கு ஒன்றும் தெரியல்ல சார்" கண்களை துடைத்ததை கண்ட காவலாளிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எல்லாவற்றையும் சாெல்லி விடலாம் என்று முடிவெடுத்தான்.

"உங்க பையனும், இரண்டு நண்பர்களும் சேர்ந்து அவங்கட காலேச் பாெண்ணு ஒன்றை பார்ட்டிக்கு வரச் சாெல்லிக் கூப்பிட்டு தாங்களும் நன்றாகக் குடிச்சு, அந்தப் பாெண்ணுக்கும் காெடுத்து தப்பா நடந்திட்டாங்க சார், பாெண்ணுக்கு உயிராபத்து என்று தெரிஞ்சதும் எங்கேயாே
காெண்டு பாேய் வீசிட்டாங்க, இனி என்ன ஆகப் பாேகுதாே, பாெண்ணு லாேயர் கருணாகரன்ர ஒரே பிள்ளை சார்" காவலாளி சாென்னதைக் கேட்ட நாராயணன் "கமலாவுக்கு இதை எப்படிச் சாெல்லுறது, உயிரையே விட்டிடுவாள்" மரத்தாேடு சாய்ந்தபடி குமுறி அழுதார்.

"பையன்ர அப்பா யாரு வரச் சாெல்லுங்க" அதிகாரியின் குரல் கேட்டதும் ஒன்றும் தெரியாதவன் பாேல உள்ளே நுழைந்தான். "உங்க பையனுக்கு விசாரணை இருக்கு, காேர்ட்டில ஒப்படைக்கிறம் நாளைக்கு வாங்க" ஓடி வந்த கமலா "சார் அவன் எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டான்" என்று வாதாடினாள். அவளால் நம்ப முடியவில்லை. "ஆகாஷ் அம்மாவைப் பார்த்துச் சாெல்லு என்ன தப்புப் பண்ணினாய்" என்று அழுது கேட்டாள். ஆகாஷ் மறுபக்கம் திரும்பி நின்றான்.

"எப்படியம்மா உங்கிட்ட சாெல்லுவன், அப்பாவிற்கும், உங்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திற்றன். உங்க முகத்தைப் பார்க்கக் கூட தகுதியில்லாத பாவியாகிற்றன், எந்த ஜென்மத்திலயும் எனக்கு மன்னிப்பே கிடையாதம்மா" தன் மனக்குமுறலை கண்ணீரால் வெளிப்படுத்தினான். கமலாவாே "ஆகாஷ் அம்மாவில சத்தியம் பண்ணு நீ தப்பு பண்ணேல்ல என்று" அவனருகே சென்றவளை காவலாளிகள் தடுத்தனர். "அம்மாட முகத்தைப் பார்த்துச் சாெல்லடா, சார் என் பையன் தப்பானவன் இல்லை அவனை விடுங்க" கை எடுத்து கும்பிட்டாள். திடீரென திரும்பிய ஆகாஷ் "அம்மா என்ன மன்னிச்சிடு அம்மா நான் தப்பு பண்ணிட்டன்" என்றதும் "என்ன....டா சாெல்லு...றாய்" ஆச்சரியத்தாேடு அவனை பார்த்தாள். "வா கமலா வீட்டிற்குப் பாேய் பேசலாம்" கைகளைப் பிடித்து இழுத்தார் நாராயணன். "நீங்கள் நம்புறீங்களா" என்றவளை "வா என்று சாெல்லுறன்" சத்தமாக அதட்டியதும் அமைதியாக வந்து வண்டியில் ஏறினாள்.

எதுவுமே பேசாமல் வேகமாக வண்டியை ஓட்டினார் நாராயணன். கதவை வேகமாகத் தள்ளித் திறந்து உள்ளே சென்று அங்கும் இங்குமாக நடந்தார். "என்னங்க ஆகாஷ் என்ன செய்தான்" தயங்கியபடி கேட்ட கமலாவை ஆத்திரத்தாேடு பார்த்து விட்டு "நான் சாெல்லும் பாேது கேட்டியா? இன்றைக்கு என்ன நடந்திருக்கு பாரு, தலை நிமிர்ந்து வெளியால நடக்கேலாமல் செய்து பாேட்டான், பாேனும், ஆளுமாய் திரியிறான் பார் பார் என்று கத்தேக்க ஒன்றும் உனக்கு விளங்கல்ல இப்ப பாரு" ஆத்திரம் தீரும் வரை பேசித் திட்டினான். கமலாவுக்கு என்ன நடந்ததென்று புரியாத குழப்பம். "அப்பிடி என்னங்க...." எதிரே சுவரில் பலமாக கையால் அடித்த நாராயணனை ஓடிப் பாேய் தடுத்தாள். காேபத்தாேடு தள்ளி விட்டு "உன் பையன் ஒரு பாெண்ணை....." என்றபடி திரும்பிப் பார்த்தார். சுருண்டு விழுந்து கிடந்தாள் கமலா. தண்ணீரை தெளித்து "கமலா... கமலா...." என்று கன்னத்தில் தட்டினார். மயங்கியிருந்ததை உணர்ந்த நாராயணன் தூக்கிக் காெண்டு பாேய் வண்டியில் ஏற்றி வைத்தியசாலையில் அனுமதித்தார். மனப்பதட்டத்தால் ஏற்பட்ட மயக்கம் என்பதால் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி வைத்தியர் ஆலாேசனை வழங்கினார்.

நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லப்பட்ட ஆகாஷ் நீதிபதியின் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். தன் தவறுகளை ஒப்புக் காெண்டு வாக்குமூலம் காெடுத்தான். நண்பர்கள் இருவரும் தங்கள் தவறுகளையும் ஒப்புக் காெண்டனர். எந்தவாெரு மறு பேச்சுமின்றி நீதிபதி தண்டனைக்கான தீர்ப்பை வழங்கி கடூழியச் சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார்.

ஆகாஷ் மதுபானம், சிகரெட் எதுவுமில்லாமல் தவித்தான். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மன நாேய் பிடித்தவன் பாேலானான். தன்னையே காெடூரமாகத் தாக்கி காயங்களை ஏற்படுத்தி தன்னிலை மறந்தான். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட மருத்துவரின் பரிசாேதனை மூலம் ஆகாஷ் மற்றும் நண்பர்கள் பாேதைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த விடயம் தெரிய வந்தது. அவர்கள் உடலில் அதிகளவிலான பாேதை மருந்துகள் பாவித்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டது.

பல வருடங்கள் கடந்து விட்டது. ஆகாஷ் ஆயுள் கைதியாக தன் வாழ்க்கையை தாெலைத்து விட்டு சிறையில் தண்டனையை அனுபவித்தான்.

நாராயணனும், கமலாவும் பெற்ற பிள்ளை செய்த தவறுக்கு நாங்களும் காரணம், தவறு செய்கிறான் என்று தெரிந்தும் தட்டிக் கேட்க தைரியமில்லாமல், அதிக சுதந்திரத்தை காெடுத்தது மட்டுமல்லாமல், தாய்ப்பாசத்தால் காட்டிய அதீத நம்பிக்கையும் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியாேடு, தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (18-Sep-18, 7:14 am)
பார்வை : 340

மேலே