என்னவள் அழகு

செந்தாமரை உந்தன் முகம் தந்ததோ
துள்ளும் கயலிரண்டும் கண்கள் தந்ததோ
ஓடும் நதிதான் உனக்கு நீள் புருவம் தந்ததோ
கருவண்ணத்துப்பூச்சி இமைகளானதோ
அன்றலர்ந்த மல்லிகை வாசம் பரப்பும்
கார்மேகம் உந்தன் காரக்குழலானதோ
வெண்சங்கு உனக்கு நீண்ட கழுத்து தந்ததோ
மல்கோவா மாங்கதுப்பு உந்தன் கன்னங்களானதோ
அது நீ சிரிக்கையிலே குங்கமப்பூ பூத்ததுபோலானதே
தேன் சிந்தும் செம்பருத்திப்பூ உந்தன் இதழ்களானதோ
அது திறந்தால் கொர்க்கை முத்துக்கள் வெண்பற்களானதோ
முந்தானைப் பின்னாலே மூடியபின்னும்
பொங்கும் இளமைத்துள்ளும் எழிலிரண்டு
கோபுர கலசங்கள் தந்த உருவமைப்போ
இத்தனை எழில்கள் தாங்கிவரும் உந்தன் அங்கம்
தாமரைக்கொடியாம் உந்தன் சிற்றிடையில்
நீ அசைந்தாடி தென்றலாய் வரும்போது
தங்கத்தேர் ஒன்று ஆடி வருவதுபோல் காண்கின்றேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-18, 11:58 am)
Tanglish : ennaval alagu
பார்வை : 877

மேலே