591 மேலோனை நூலோனைத் தொழுதலே விழுப்பயன் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 49

ஆசிரியத்தாழிசை

ஐம்புலனுந் தானா யவைநுகரு மின்பமுமாய்
வெம்புலநோய் மாமருந்தா மேலோனை நூலோனை
நம்புமவர்க்(கு) அடைக்கலத்தை நாடீர் நமரங்காள். 49

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

ஆண்டவனின் அடிமையாய், மக்களாய் ஆருயிர்த் தோழராய், அகம்நிறை காதலஞ் செவ்வியராய் வாழும் நம்மவர்களே! ஒன்றாய் நிற்குந் தன்மையில் ஐம்புலனும் தானாய் வேறாய் நிற்கும் தன்மையில் அப்புலன்கள் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்து நுகரும் இன்பமாய், அவ்வின்ப இடையீடு ஏற்படின், அவற்றை நீக்கி இன்புறுத்தும் அருள் மருந்தாய் விளங்கும் முழு முதலை, மறைந்த குறைவிலா நிறைவை, நம்புவார்க்கு அடைக்கலமாஞ் செம்பொருளை நாடுவீர்களாக.

ஐம்புலம்-மெய், வாய், கண், மூக்கு, செவி. நுகரும்-அழுந்தி அறியும்; அனுபவிக்கும். நமரங்காள்-நம்மவர்களே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-18, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 101

மேலே