தாய்தாய்க்கொண்டு ஏகும் அளித்திவ் வுலகு – நாலடியார் 15

நேரிசை வெண்பா

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்,தாய்க்கொண்(டு)
ஏகும் அளித்திவ் வுலகு. 15

இளமை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

எனக்குத் தாயாயிருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு தனக்குத் தாய் விரும்பி இறந்துபோனாள்; அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும் அவ்வாறே போனால் ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் எனப்படுகிறது.

கருத்து:

இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாது என்பது திண்ணம்.

விளக்கம்:

‘இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-18, 12:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே