எங்கு நீ சென்றாய்

அவள் சிரித்தாள் பல்
முல்லை மலர் விரித்தாள்
புரி புரியாய் ஜடைத்
தோகை மடை விரித்தாள்
கருணை நெஞ்சில் பொழியும்
கார்கால வருணமானாள்
என் நெஞ்சில் கலந்து நினைவில்
மிதக்கும் அழகின் வர்ணமானாள் ,

குயில் பாட்டு மனதை
ஏனோ ரசிக்கவில்லை
மலை முகட்டில் இறங்கி வரும்
நீரூற்று மனதை ருசிக்கவில்லை
மலர் தூறி எங்கும் விரியும்
பசுந்தரை மனதை
வந்து தொடவில்லை
கிளைகள் எங்கும் கொஞ்சி
விளையாடும் கிளிகள்
சத்தம் கவரவில்லை
காத்திருப்பில் கரையும் நேரம்
விரைவில் போய் நகரவில்லை
ஏனடி நீ என்னைக் காண
இன்னும் இங்கு வரவில்லை

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (20-Sep-18, 5:29 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : engu nee senraai
பார்வை : 443

மேலே