வாழிய தமிழினம்

தமிழின் முதல் தேடினால் அது
கடவுளின் தொடக்கம்....
தமிழின் இறுதி தேடினால் அதுவே இந்த
தரணியின் முடிவு...

ஆயிரம் பாக்கள் சங்க இலக்கியம்...
இரண்டடி குறளிலும் தமிழ் அடங்கும்...

தரமில்லை என்று அழிந்தன பல மொழிகள்
தமிழ்மொழி வயிற்றினில் பிறந்தன சில மொழிகள்!!

தமிழ் தேடி போனால்... .சீனாவின்
கல்வெட்டிலும் தமிழ் கிடைக்கும்...
கடாரம் தோற்றதிலும் தமிழ் இருக்கும்...

தமிழர் இல்லாத ஊரில்லை
தமிழரால் வம்பென்று பேச்சில்லை

அன்பென்று வந்தால்
தாயுள்ளம் போலே
தமிழினம் அணைக்கும்...
வம்பென்று வந்தால்
தமிழனின் அடக்கம்
சீண்டுற வரைக்கும்...

வாழ்க தமிழ்!!
வாழிய தமிழினம்!!

எழுதியவர் : அமுதன் (21-Sep-18, 10:38 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 923

மேலே