தெரியாது

தெரியாது
மலருக்குள் வாசம் இருப்பது மலருக்குத்தெரியாது
மண்ணுக்குள் பானை இருப்பது மண்ணுக்குத் தெரியாது
பழத்திற்குள் சுவை இருப்பது பழத்திற்குத் தெரியாது
பாலுக்குள் நெய் இருப்பது பாலுக்குத் தெரியாது
கரும்பிற்குள் இனிப்பு இருப்பது கரும்பிற்குத் தெரியாது
கடல் நீருக்குள் உப்பு இருப்பது கடல்நீருக்குத் தெரியாது
வேருக்கு மேல் பெரிய மரம் இருப்பது வேருக்குத் தெரியாது
மரத்திற்குள் உறுதி இருப்பது மரத்திற்குத் தெரியாது
இவையாவும் அறிவால் அறிந்த மனிதா
அகத்தையும் ஆணவமும் அழிவிற்கு வழியென அறியாதவறினாயே
அகிம்சையும் அன்பும் அகிலத்தையும் ஆளச்செய்யும் என்று அறிந்து கொள்வாயோ

எழுதியவர் : கே என் ராம் (22-Sep-18, 6:30 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : theriyaadhu
பார்வை : 69

மேலே