மனம் செழிக்க மழையே நீ பொழிந்து வா

நீயில்லா நானாகி
நிலவில்லா வானாகி
நான் உடல் காய்கிறேன்
நடையிழந்த கூனாகி
கழையிழந்த செடியாகி
தடம் தேய்கிறேன்
சுவையிழந்த தேனாகி
தாகத்தின் தாக்கத்தில்
காய்ந்துடல் சருகாகி
மனம் வேகிறேன்
பசுமையிழந்த
பாலைக் குட்டையாகி
உருக்குலைந்த
வேலிக் கட்டையாகி
வேர் சாய்கிறேன்

என் பூந் தென்றலே
எங்கே நீ சென்றாயோ
இங்கே பூவாசம் வீச வா
கார்கால மழையாக
நீ எழுந்து இங்கு வா
என் கருகிய நிலம்
செழிக்க உடன் நீ
பொழிந்து வா

அஷறப் அலி

எழுதியவர் : alaali (22-Sep-18, 2:34 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 159

மேலே