சந்திப்பு

இதயம் இணைந்த காதலர்கள்
இணைந்தே வந்த கடற்கரையில்
உதய நேரக் கதிரவனும்
உவந்தே வந்தான் இணைகாண,
புதிதாய் வாழ்வைத் தொடங்குமிவர்
பகலவன் வரவில் மகிழ்கின்றார்,
சதிபதி யிவர்களை வாழ்த்தியேதான்
சிவந்தது வானின் முகமதுவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Sep-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : santhippu
பார்வை : 67

மேலே