ரகசியம் 7

அன்பின் குழப்பங்கள் அதிக்கரிக்க அன்று அமாவாசை
இரவு பொழுது வெகு நேரம் தூங்காமல் யோசித்த படி படுக்கையறை நடையால் அளந்து கொண்டு இருக்க உறக்கம் வராமல் அன்பு தன் ரேடியோ பெட்டியில் பாட்டுகளை கேட்டு கொண்டிருந்தான்.நடுநிசி ஆகியும் அவனுக்கு உறக்கம் வரவில்லை..
ஒரு பெண்ணின் குரல் காற்றோடு கலந்து வெகு தொலைவில் இருந்து கேட்டது...அவளின் அழுகை குரலோடு கதறல் சத்தம் ஊரே அவ்வளவு அமைதி நிலையில் இருக்க அவளின்
குரல் மட்டுமே...... உடனே தன் ரேடியோவை நிறுத்தி விட்டு சன்னல் ஓரம் நின்று காதை சன்னலின் மேல் வைத்து உற்று நோக்கினான்...
அது பெண்ணின் குரல் தான்...அன்பு ஒரு நிமிடம் என்ன செய்வது என அறியாது திகைத்தான்... பிறகு வெளியே வந்தான்..கதவு பூட்டால் பூட்ட பட்டு இருந்தது....
என்ன செய்வது என அறியாமல்
பின்புறம் சென்று சுவரை தாண்டி வெளியே போக யோசனை செய்தான்... உடனே பின்புறம் வேகமாக வந்தான்....
ஆனால் அந்த கதவும் மூட பட்டிருந்தது...என்ன செய்வது அறியாது தன் படுக்கைக்கு
சென்றான்...


என்ன இது அந்த குரல் ஆபத்தில் இருக்கிறது... எவரும் உதவாமல் உறங்கி கொண்டிருக்கின்றனர்... அந்த குரல் யாருடையது? எதற்காக வீட்டை பூட்டி ஊரே அமைதிகாக்கிறது?
என்ன நடக்கிறது????எதை இவர்கள் என்னிடம் மறைக்கின்றனர்????? என்னவாக இருக்கும்???

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Sep-18, 7:27 am)
சேர்த்தது : உமா
பார்வை : 128

மேலே