தற்கொலை செய்யும் கனவுகள்

சாதிக்க ஆசை தான்
கனவும் பெரிதாய் இருக்கு தான்
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
சதி செய்ய வருவதேன்?

போதிக்க பலருண்டு
அறிவுருத்த ஆளுண்டு
சிறிதாய் சறுக்கி விழுந்தாலும்
சிரிப்பதேனோ எனைக்கண்டு?

முயல்பவனுக்கு தடை உண்டு
அஞ்சாமல் இருக்க விடை உண்டு
நிமிர்ந்த வீர நடை உண்டு
பயப்படாதே சிறுகல் கண்டு

அடிகள் வாங்கும் கல்லிங்கே
சிலையாய் மாறும் வாய்ப்புண்டு
அடிகள் வைத்தே முன்னேற
தோல்வியும் துவளும் உனைக்கண்டு

வெற்றி பெறவே போராட்டம்
ஜெயித்தாலுடனே தேரோட்டம்
அதன் பின் வேண்டாம் ஆர்ப்பாட்டம்
அடக்கி வாசிக்க கிடைக்கும் ஏற்றம்

கனவுகளை புதைத்து விடாதே
புதைத்தாலும் விதையாய் வை
எதை எதிர்த்தும் எழுச்சி செய்
வீரிய மரமாய் பூத்து நில்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (23-Sep-18, 11:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 61

மேலே