அணில்பிள்ளை
அணில்பிள்ளை
முகவுரை
வீட்டில் பலவித மிருகங்களையும், ஊர்வனவையும் பறவைகளையும் வளர்ப்பது சிலருக்கு பொழுது போக்கிற்கு பிடித்த செயல்களில் ஓன்று தனிமை போக்க ஓரு முதியவருக்கும் ஒரு அணிலுக்கும் ஒரு நாயுக்கும் உள்ள உறவை எடுத்து சொல்கிறது இக் கதை
குமாரதேவன் ( தேவன்) இலங்கை அரசில் முப்பது வருடங்கள் பல ஊர்களில் வேலை செய்த ஒரு கால்நடை வைத்தியர் . மிருகங்கள், பாலூட்டிகள், பறவைகள் மேல் அவருக்கு தனிப்பிரியம். அவருக்கு திருமணமாகி அகிலன். முகிலன். இரு ஆண் பிள்ளைகள் , இருவரும் தங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவிலும் கனடாவிலும் வசித்து வந்தனர். தந்தையை தங்களோடு வந்து இருக்கும் படி அவர்கள் கேட்டும் அவர் தன் உயிர் கண்டியில் தன் வீடான குமாரபவனத்தில் தான் பிரிய வேண்டும் என்பது அவர் விருப்பம், அதனால் பிறநாடு போக மறுத்து விட்டார் .
கண்டியில், பேராதனை பூங்காவுக்கு அருகே அரை ஏக்கர் காணி வாங்கி பல வருடங்களுக்கு முன் அவர் கட்டிய நான்கு அறைகள் கொண்ட வீடு குமாரபவனம். வீட்டுக்கு பின்னாலும் முன்னாலும் பெரும் தோட்டம் , தோட்டத்தில் ஒரு சிறு நீர் தொட்டி.. அதன் அருகே பறவைகளும் அணில்களும் உண்ணும் ஒரு தானியம் வைக்கும் கூடு அதன் அருகே தொங்கிக் கொண்டு இருந்தது முயல்கள், பறவைகள் அணில்கள், பூனைகள் வந்து நீர் தொட்டியில் குளித்து விட்டுப் போகும் ,
சில வருடங்களுக்கு முன் அவரின் மனைவி துளசி, புற்று நோயினால் காலமானாள் . அவள் இருந்த காலத்தில் கணவனையோ பிள்ளைகளையோ நாயோ பூனையோ வீட்டில் வளர்க்க விடவில்லை. ஓய்வு பெற்ற தேவனுக்கு மனைவியின் மறைவுக்குப் பின் பொழுது லப்ரோடர் இனத்தை செர்ந்த கருப்பு நிற மெலடி என்ற நாய் குட்டி மட்டுமே இருந்தது. அந்த குட்டியை அவரோடு கால்நடை வைத்தியராக மாத்தளையில் வேலை செய்த சிங்கள நண்பர் மேர்வின் பெரேரா தேவனுக்கு பரிசாகக் கொடுத்தது .
இளயராஜாவின் இசையில் தேவனுக்கு ஆர்வம் அதிகம் அந்த நாய் குட்டிக்கு இளயராஜாவின் இன்னிசை நினைவாக “மெலடி” என்று பெயர் வைத்து வளர்த்தார். வீட்டில் சமையலுக்கும் தோட்டத்தை கவனிக்கவும் சிவா என்ற பதுளையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் இருந்தான்
ஆரம்பத்தில் மெலடிக்கு தோட்டத்துக்கு வரும் முயல்கள் குருவிகளை கண்டால் பிடிக்காது வீட்டுக்குள் இருந்தபடியே குரைத்து, அதைத் தோட்டத்திலிருந்து துரத்த தன்னை வெளியே விடும்படி ஆராவாரப்படும். தோட்டத்துக் போகும் கதவைத் திறந்து விடும்படி வாசற் கதவில் தொங்கும் மணியை மெலடி அடிக்கும். குருவிகளையும் முயல்களையும் போய் பயமுறுத்த அதற்கு ஆவல். அவைகளை துறத்திய பின்னர் திரும்பி வந்து வீட்டுக்குள் வர கண்ணாடிக் கதவை மெலடி தன் கால்களால் தட்டும்.
“கதவைத் திறவுங்கள் எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட வேண்டும்” என்பது போல் இருக்கும் அதன் செயல்;. மெலடி வீட்டுக்குள் வர கதவைத் திறந்து விட்டால், உடனே அது உணவும் தண்ணீரும் வைத்திருக்கும் இடத்துக்கு ஓடும். தண்ணீரை மடக் மடக் என்று குடித்தபின்னரே தன் உணவைச் சாப்பிடும்.
மேலடிக்கு ஆங்கலத்திலும் தமிழிலும் தேவன் பேசுவது விளங்கும். “மெலடி இரு” என்று ஆங்கிலத்தில் சொன்னால் பதுமையாக இருக்கும். “ மெலடி சத்தம் போடாதே” என்று தமிழில் சொன்னால் குரைப்பதை நிறுத்திவிடும். “மேலடி யூ ஆர் ஏ குட் போய்” என்றால் வாலை ஆட்டியபடி தனது மகழ்ச்சியைக் காட்டியவாறு என் அருகே வந்து தன்னைத் தடவச் சொல்லி முகத்தை நீட்டும். அறிவு பள்ளிக்கூடது;துக்கு போய் திரும்பும் வரை முணுமுணுத்தபடியே இருக்கு;.; அறிவு வீடு திரும்பியபின் சந்தோஷத்தால் அங்கும் இங்கும் ஓடி தன் கவனத்தை அவனிடம் இருந்து கவரப்பார்க்கும். அதற்கு சதம் போடும் போமை ஒன்றை தேவன் வணகி கொடுத்திருந்தார். தனது மகிழ்ச்சியை அந்த பொம்மையை கவ்விய படி ஓடி சத்தம் போட வைத்து காட்டும்.
****
ஒரு நாள் தேவன் மெலடியோடு தோட்டத்தில் உலாவும் பொது ... க்ரீச் எனும் சத்தத்தோடு . பொத்தென்ன்று இன்னமும் கண் விழிக்காத ஒரு அணில் குட்டி அவர் காலருகில் விழுந்தது ..பூனை ஒன்று அதை உணவாக்க பார்த்துக் ண்டிருந்தது... மெலடிக்கு பூனைகள் என்றால் பிடிக்காது.. பூனையைக் கண்டவுடன் தன் குரலை உயர்த்தி குரைத்து துரத்தி விட்டது .
அணில் குட்டியை விட்டுச் செல்ல மனமில்லாமல் தேவன் யோசித்தபோது தோட்டதுக்கு வந்த சிவா தேவனைப் பார்த்து “பாவம் ஐயா ... இப்ப இந்த குட்டியை கீழ விட்டாலும் அதோட அம்மா வரமுன் எதாவது ஒரு பூனை வந்து பிடிச்சு சாப்பிட்டுடும்... நாங்கள் வீட்டுக்கு எடுத்துட்டுபோயிட்டு நாளக்கி கொண்டு வந்து விட்டிடலாம்” என்று சொன்னான்..
தேவனும் சரியென்று கொண்டு சென்ற பையில் குட்டியை போட்டு லேசாக மூடி வீட்டுக்கு எடுத்துச் சென்றார்
வீட்டுக்குள் போனதும் :”சிவா இந்த அணில் குட்டிக்கு என்ன உணவு கொடுப்பது ?. தேவன் கேட்டார்
“: ஐயா பிறந்த குட்டிக்கு இங்க் பில்லரில் பாலை குடுப்பம் :
:”நல்ல யோசனை சிவா” : என்று சொல்லி. தன் அறையில் இருந்த இங்க் பில்லரை கொண்டு வந்து அதன் வாயைத் திறந்து பாலைச் சொட்டு சொட்டாக கொடுத்த பின் ... அதற்காக உருவாக்கிய துணிக் ககுவியலில் தூங்க வைத்தார . இதை மெலடி பார்த்து கொண்டு இருந்தது.,
“ஐயா இந்த அணில் குட்டிக்கு என்ன பெயர் வைப்போம்” ? சிவா கேட்டான்
“ சில வினாடிகள் சிந்தித்து விட்டு பிள்ளை போல் பால் குடித்த படியால் “பிள்ளை” என்று பெயர் வைப்போம் . மெலடிக்கு சேர்ந்து விளையாட ஒரு தம்பி வந்து விட்டான்: என்றார் தேவன்: அவர் சொன்னதை கவனமாக் கேட்டுக்கொண்டிருந்த மெலடி ஓடிப் போய் தூங்கிக் கொண்டிருத் அணில்பிள்ளையை கொஞ்சியது.. அதை தேவனும் சிவாவும் எதிர்பார்க்கவில்லை
“ பார்த்தாயா சிவா . நான் சொன்னது மெலடிக்கு புரிந்து விட்டது . சரியான புத்திசாலியான நாய். இனி மெலடி எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல அணில்பிள்ளைக்கும் பாதுகாவலன்.”
அதற்கு அணில்பிள்ளை என்று செல்லப்பெயரிட்டு தேவன் அழைத்தார் .. சிறிது நாட்களில் அது அவர் வீட்டில் ஒரு செல்ல பிள்ளை ஆயிட்டு . அதன் சேட்டைகளைப் பார்க்கவே ஏகப்பட்ட அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்கள் வருவார்கள் . தேவனால் . நன்கு பழக்கப்படுத்தியமையால் கையை
நீட்டினால் அதில் ஏறி அமர்ந்து கொண்டு அப்படியே தோளில் மேல் ஏறி ஒய்யாரமாய் உட்கார்ந்து கொள்ளும்.... அப்படியே எவ்வளவு நேரெமென்றாலும்...
தேவன் ஒரு நிலக்கடலை கொடுத்தால் வந்து வாங்கிக்கொண்டு மீண்டும் தேவன் தோள்பட்டைக்கு வந்து .சாப்பிட்டு முடித்தவுடன் அவர் மடியில் உரிமையாய் வந்து படுத்து உறங்கும்... பின் அவர் அதை இறக்கி விட்டால் சோபாவின் மேல் இருக்கும் துணியின் அடியில் கதகதப்பான இடத்தில் படுத்திருக்கும் . ...
தேவன் வீட்டில ஒரு புது ஜீவன் நுழைந்தது. முதலில் ஒரு மாதத்திற்கு இங்க் பில்லர் பால்தான். அந்த ... மள வளர்ந்த குட்டி வீட்டுக்குள் ஓட ஆரம்பித்தது... பின் மெலடியின் முதுகில் ஏறி விளையாடியது . மெலடிக்கு சந்தோசம் . அணில்பிள்ளையை தன முதுகில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் மெலடி பவனி வரும். அவர்களின் சகோதர பாசத்தைக் கண்டு தேவன் வியந்தார் காலையில் அட்டைப்பெட்டிக்குள் வைத்த குட்டி மாலை வரும்போது ஏதோ ஒரு ரூமிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும். நாம் வந்த சத்தம் கேட்டால் எட்டிப் பார்க்கும். சில நேரங்களில் எங்காவது துணிமூட்டைக்குள் நன்கு தூங்கிக்கொண்டிருக்கும் அதுக்குப் பக்கத்தில் மெலடி காவல் இருக்கும்.
ஒருமுறை மாத்தளையக்கு உறவினர் வீட்டுக்கு செல்லும்போது பிள்ளையை என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கூடையில் போட்டு காரில் ஒய்யாரமாய் மெலடியோடு கூடி சென்றார் ..உறவினர் வீட்டிலும் அதன் குறும்புகள்...
அப்போது சரி அதன் வாழ்வியல் அதற்கு வேண்டும் மரத்தில் ஏறி ஓடி விளையாடுவது ,அதற்கு மரம் ஏறக் கற்றுத் தரலாம் என்று ஒரு முறை தேவன் தொடஹில் இருந்த மா மரத்தில் ஏற தேவன் விட்டார் முதலில் ஏற மறுத்த பிள்ளை அதன் இனத்தின் சத்தம் மரத்தின் மேலே கேட்டதும் ஏறி இறங்கி மூன்று முறை விளையாடியது... நான்காம் முறை மேலே போன பிள்ளையை ஒரு பருந்து கவ்விச் சென்றது.... அய்யோ அதன் வாழ்க்கை முடிந்து விட்டதெனக் கருதினாலும் , ஐந்தாறு பேர் அந்தப் பருந்தை கத்தியவாறே துரத்தினோம்.... என்ன நினைத்ததோ கவ்விய பிள்ளையை ஒரு சிறிது தூரத்தில் போட்டுச் சென்றது... பயத்தில் இருந்த அதனை கொண்டு வந்து தெவான் ஆசுவாசப்படுத்தினார் ....இந்த நிகழ்ச்சிக்குப் பின் தேவனையும், மெலடியையும் விடாமல் பின் தொடர்ந்த வண்ணமே இருந்தது.... யாரேனும் ஒருவர் அதனுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.... தேவன் பெப்பர் வாசிக்கும் ஷேவ் செய்யும்போது என பின்னாடியே இருக்கும் .... எத்தனை தடவை தெரியாமல் மிதி பட்டாலும் தேவனை விட்டு விலகாமல்..இருக்கும் .
இப்படியாகச் சென்ற அதன் வாழ்வில் அதன் எதிரிகள் யார் என எங்களால் அடையாளம் காட்ட முடியவில்லை... அதற்கு நாமும் ஒன்றுதான் பூனையும் ஒன்றுதான்.
ஒரு நாள் அதன் வழக்கமான கண்டுபிடி விளையாட்டைத் தொடங்கியது...ஆம் பருந்து பயத்திலிருந்து விடுபட்டு ... வீட்டிற்கு வெளியில் ஓடும்.... நாம் கூப்பிட்டவுடன் வந்து எட்டிப் பார்க்கும் .... பின் திரும்பவும் ஓடும் இதி மெலடி அதுக்கு காற்றுக்கு கொடுத்த்போல் தேவனுக்கு இருந்தது ... இப்படியாக ஓடி உள்வந்து என்று இருக்கும்போது ஒருமுறை வெளியே சென்ற பிள்ளை வெகு நேரமாகக் கூப்பிட்டும் வரவில்லை.... சரியென்று வெளியே சென்று பார்த்தபோது பக்கத்துவீட்டுப் பூனை வாயின் ஓரத்தில் இரத்தத்தோடு தன் வாயை நாக்கால் தடவிக்கொண்டிருந்தது....
என்ன நடந்திருக்கும் எனப் புரிந்தது... நம்மிடம் விளையாடுவது போலவே பூனையிடமும் அருகில் சென்று மாட்டி தன் உயிரை இழந்தது அந்த ஜீவன்.
அணில்பிள்ளை மறைந்த சில நாட்களுக்கு மெலடி உணவு உண்ண மறுத்து சோகமான முகத்ஹோடு இருந்தது.. அதன் போடும் பொம்மை ஒரத்தில் கவனிப்பார் அற்று இருந்தது . மெலடியும் ஒரு வாரத்தில் இறந்தது . தேவன் திரும்பவும் தனிமையானர்.
அன்று கனடா மிசிசாகவில் இருக்கும் மகனிடம் இருந்து கோல் வந்தது: “அப்பா உங்களுக்கு கனடாவுக்கு என் ஸ்போன்சரில் வர விசா கிடைத்து விட்டது . இனியாவது முடியாது என்று சொல்லாமல் வாருங்கோ;. உங்கள் பேரன் ரமேஷும் அவனின் அணில் குட்டியும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் “
தேவன் சற்று பநேரம் சிந்தித்து விட்டு. “சரி மகன் நான் கனடாவுககு வாறன்” என்றார்.
“ அப்போ சிவா என்ன செய்யப்போகிறான்”?.
“ என் நண்பர் மேர்வின் அங்கிள் வீட்டில் வேலை செய்வான். என் வீட்டை ஒரு வெளி நாட்டவருக்கு வாடகைக்கு கொடுத்து விடுவேன்.: லீவில் கண்டிக்கு வரும் போது நான் தங்குவதற்கு முன் அறையை எனக்கு என்று பிடித்து வைத்துக் கொண்டு தான் வாடகைக்கு கொடுப்பேன்” என்றார் குமாரதேவன் .
“ சரி அப்பா உங்கள் விருப்பப் படி செய்யுங்கள்.” : என்றான் மகன் அகிலன்.
***