நிலவும் மயங்கிய அவள் அழகிய முகம்

வான் நிலவுக்கும் தன் அழகைப்பார்த்து
ரசிக்க தோன்றியதாம் ..................
இப்படி"' வையகத்தில் என் எழிலை, அழகைப் புகழா
கவிஞர்கள் இல்லையே .......இருந்தும்
மனிதனைப்போல் தன் அழகை தானே கண்டு
ரசிக்க இவானில் நிலைக்கண்ணாடி ஏதும் இல்லையே
பின் என் அழகை நானே பார்த்து ரசிப்பது எப்போது
இது சாத்தியம்தானா ...................
என் செய்வேன்" என்று வேதனைப்பட்டு
விண்ணில் பயணிக்க, அன்று பௌர்ணமி முதல் நாள்
.... தன் பூரிப்பில் முழுவதுமாய்ப்
பூத்திருந்த நிலவு.............
அதோ, அந்த அழகிய மலை அடிவாரத்து
தடாகத்தின் மேல் வந்திட ...............நிலவின் பேரொளியில்
இயற்கையின் நிலைக்கண்ணாடியாய் திகழும்
அந்த தடாகத்தின் நிர்மலமான பளிங்கு நீரில் தன் உருவத்தைப்பார்த்து
மெய்மறந்த நிலவு , தடாகத்தின் மேலே இன்னும்
சில நாழிகை அசையாது நின்றிட ...............ஆச்சரியம்
அங்கு தன் அழகையும் மிஞ்சும் மற்றோர் நிலவின்
முகம் பக்கத்தில் இருப்பதைக்கண்டு அசந்துபோனது நிலவு!
நிலவுக்கு தெரியாது அந்த முகம்.............தடாகத்தில்
அல்லிமலர் பறிக்கச்சென்ற என் காதலியின்
முகம்தான் அந்த முகமென்று!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Sep-18, 6:09 am)
பார்வை : 394

மேலே