காதல்

அழகு மகளாய் வந்தாய்
தமிழ் மொழி பேசி வந்தாய்
தமிழ் மகளாய் நானறிந்தேன்
உன்னோடு பேசி மகிழ்ந்தேன்
பேச பேச தேன் தரும்
உந்தன் வாய்மொழி
கேட்க கேட்க குயில்பாட்டின்
இனிமை தந்ததடி - உன்னோடு
நெருங்கி உறவாட கருமேகம்போல்
நான் வந்தேன் மயிலாய்
என்முன் ஆடி வந்தாய் நீ

காலைக் கதிரவனடி
நான் உனக்கு என்றேன்,
மகிழ்கின்றேன் மன்னவனே,
நீதானே எனக்கு இரவின்
சந்திரனும் என்றாய் ;....
இனி என்ன பெண்ணே
ஒட்டிஉறவாட ஏன் தயக்கம்
என்றேன்........அந்நாள் வரும் வரை
காத்திருப்போம் அன்பே அதுவரை .
பேசி மகிழ்வோம் என்றாய் .உந்தன் இந்த பேச்சில்
என் மனது மயங்கியதென்றேன்,
இனி அது உன் மனதல்ல என் மனதென்றாய்;
என் மனதை நானறியாமலே
ஒரு கள்வனைப்போல் பறித்து சென்றுவிட்டாயடி நீ .


சாளரத்தை திறந்து நின்றேன்
ஜன்னலுக்குள் வந்தது நிலவு,
' நிலவே என்னவளை வழியில்
என்னவளைக் கண்டாயா' என்றேன்,
நிலவு சொன்னது , நக்கலாய்,
' உன் மனதை அவளிடம் தொலைத்துவிட்டாய்
அவள் அறியாள்l அவள் தன் மனதை உன்னிடம்
விட்டுச்சென்றாள் என்பதை நீ அறியாயோ,,
இப்போது உன் மனதைப்பார்
அவளிருப்பாள் கண்டுகொள்வாய் நீ
என்று கூறி சென்றது நிலவு'.

வெட்கி தலைகுனிந்த நான்
கண்டுகொண்டேன் என்னவளை என் மனதில்
இனி காத்திருப்பேன் காலம் வரும்வரை
அவள் வரவிற்காக அவளுக்காக மட்டும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-18, 4:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 179

மேலே