இவள் உன் தேவதை

.

இது உனது கடல்
அவளிடம் அலையில்லை

இது உனது வனம்
அவள் இலையுதிர்கிறாள்

இவை
உனது கண்கள்
அவள் அழுகிறாள்

இது
உனது கனவு
அவள் கலைந்து போகிறாள்

இது
உனது புன்னகை
அவள் ரணப்படுகிறாள்

இவை
உனது கால்கள்
அவள் முடமாகிறாள்

இது
உனது முத்தம்
அவள் ஜடமாகிறாள்

இவள்
உன் தேவதை
இவள்
ரட்சிக்கப்படவில்ல

இவள்
உனது உடை
நீ களைகிறாய்

இவள் உனது உடல்
இது உன் காமம்

இனி
நீ புணரலாம் ...

எழுதியவர் : முகிலன் (26-Sep-18, 4:39 pm)
சேர்த்தது : முகிலன்
Tanglish : ival un thevathai
பார்வை : 258

மேலே