பழிக்குப் பழி

பழிக்குப் பழி

மரம் வெட்டினோம் !
மழையில்லை!

மழை நின்றது!
நீரில்லை!

நீர் வற்றிட
நெருப்பானாய்!

தீ கக்கிடும்
மலையானாய்!

புகை கொண்டுதான்
பகை வளர்த்தோம்!

பகை கொண்டதால்
பழி செய்தாய்!

வானில் கதிர்களுக்கு
வழி கொடுத்தாய்!

வையம் அழிந்திட
வழி வகுத்தாய்!

கடலின் மட்டம்
உயர்கிறதே!

கரைகள் எல்லாம்
மறைகிறதே!

காற்று மண்டலம்
மாசு படிந்தது!

ஒசோன் படலம்
ஓட்டை யானது!

ஊதாக் கதிர்கள்
உட்புகுந்தது!

உலகை இன்று
அழிக்கின்றது !

எழுதியவர் : கவி இராசன் (28-Sep-18, 1:02 am)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 714

மேலே