யாதுமானவளே

#யாதுமானவளே

மதிமுகமும் தோற்குமடி
மங்கையுன் முகவழகில் /
நீ தேய்பிறை இல்லையடி
முழு நிலவாய் என்றுமடி..!/

அன்பு மலைச்சுனையாய்
அள்ளச் சுரக்குதடி/
கண்மணி நீ எனக்கு
கன்னல் கவிதையடி/

இமயத்தின் பனிச்சாரல்
நீயெனைக் காண்கையிலே/
உருகாமல் இறுகுகிறேன்
உறைபனி நானெனவே..!/

கடைக்கண் பார்வையிலே
குடைந்து நோக்குகிறாய்/
காதல் மடை திறக்க - என்னுள்
தணல் வந்து பாயுதடி..!

பூமரக் குயில்கள் எல்லாம்
பாடிக் களிக்குதடி/
உன்குரல் இனிமை கண்டு
ஓடி ஒளியுதடி..!/

பிச்சிப் பூச்சூடி
பெருமையிலே பின்னலடி/
பின்னழகில் ஆடு்தடி - உன்
பேரழகில் நான் பித்தனடி..!/

உயிருக்குள் ஊஞ்சலிட்டு
ஓயாமல் ஆடுகிறாய்/
ஒய்யார நினைவுகளில்
ரீங்காரம் பாடுகிறாய்..!/

சின்ன அடியெடுத்து
சின்னவளே நடக்கின்றாய்/
சிணுங்கும் தண்டை ஒலியினிலே
மனசு கொள்ளை போகுதடி..!/

கெண்டை விழியிரண்டில்
இட்டாய் தூண்டிலடி
முள்ளாய் குத்தவில்லை
கள்ளாய் போதையடி..!

பாய்மரப் படகெனவே
ஆடியே வருகின்றாய் - இனி/
வாய்மொழி ஏதுமின்றி
நான் மடி சாய்ந்திடுவேன்..!/


#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (29-Sep-18, 7:46 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 529

மேலே