அந்த அழகி

மலர்க்கொடி இவள் பெயர்,
மலர்க்கொடி இவள்; மலர்க்கொடிகளில்
செங்கமலம் , இவள் சிற்றிடை அக்கொடியேன்றால்,
இவள் முகம் சிவந்த தாமரையே,
இவள் செங்கமலம்



தங்க விகிரகம்போல் எழில்பொழியும் இவள் அங்கம்
அதைப்போர்த்திய இவள் மேலாடை பட்டாடை
சின்னாளம்பட்டி சிற்றாடை அதைப் பக்குவமாய்
இவளுடுத்தி அதன் பின்னே மார்பில் கச்சை இருத்தி
துள்ளும் இளமையயை கட்டுப்படுத்த அங்கு
அவள் பண்பு ஓர் கொடிக்கமலம்

காலை இளவெய்யிலின் செந்தீப கிரணங்கள்
குயில் கூவும் வேளைதனில் மங்கை இவள்
வீட்டின் முன்னே வந்து கதிர் பரப்ப
வெளியில் வந்த இவள் முற்றத்தில்
பசுஞ்சாண நீர்தெளித்து சுத்தம் செய்து
அரிசிமாவில் பொட்டிட்டு அழகு கோலமிட்டாள்
அதன் நடுவில் பூவும் வைத்தாள்

கோலமிடும் அவள் கொவ்வை செவ்விதழ்கள்
சின்னதாய் மலர்ந்து பிலஹரி ராகத்தில்
மெல்ல மெல்ல இறைவன் துதியொன்று பாட
அதிகாலைப்பொழுதின் நிசப்தத்தில்
அந்த ராகம் என் காதில் வந்தொலித்தது
அதைகேட்டுதானோ தெரியவில்லை அந்த
மாமரத்து குயிலும் குயில் பாட்டு பாட
மறந்து கூவ மறந்தது ............

இந்த கிராமத்து வண்ண மயில்
இவள் பேரழகில் மெய்மறந்து போனேன் நான்
எதிர் வீட்டு சாளரத்தின் வழியே
அவள் எழிலைப் பார்த்து மகிழ்ந்தேன்
அவள் என்னைப் பார்க்கவில்லை
நான் மட்டும் அவளை பார்த்தேன் பூரித்துப்போனேன்
' a thing of beauty is joy for ever' என்று
என்னையறியாமல் என் வாய் முணுமுணுத்தது.....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Sep-18, 11:45 am)
Tanglish : antha azhagi
பார்வை : 2646

மேலே