முதுமையில் ஓய்வு சுமையானது

குழந்தை பருவத்தில்
நடைபழகி ஓடுகிறோம்;
பள்ளிக்கு ஓடுகிறோம்
பரிட்சைக்கு ஓடுகிறோம்; 1

கல்லூரிக்(கு) ஓடுகிறோம்
கால்கடுக்க ஓடுகிறோம்;
காதலிக்க ஓடுகிறோம்
காதலிக்காய் ஓடுகிறோம்; 2

வேலைதேடி ஓடுகிறோம்
காசுதேடி ஓடுகிறோம்;
கல்யாணம், பின்மனைவி
சொல்லுக்கும் ஓடுகிறோம்; 3

பிள்ளைகளுக்காக
பெற்றோருக்காக
ஓடுகிறோம்; பணிஓய்வும்
மூப்புடன் சர்க்கரையும்! 4

மருத்துவர் ஆலோசனைப்படி
நடக்கவும் வேண்டும்,
தேவையானால்
ஓடவேண்டி யிருந்தது! 5

முதுமையில் ஓய்வு
புதியசுமை யானது,
நடையும் ஓட்டமும்
உடலுக்கு சுகமாகும்! 6

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-18, 8:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

மேலே