அந்தியில் அருந்திட தருவாயா

சற்று யாப்பு வழி நடப்போம்

செந்தாமரை பூத்த செங்கமலத் தடாகம்
செந்தமிழ் பூக்கும் உன்முகம் பூங்கமலம்
பைந்தமிழ் இதழில் பழரசம்ஏந் தியவளே
அந்தியில் அருந்திட தருவாயா வஞ்சமிலாமலே !

-----இது நிலை மண்டில ஆசிரியப்பா .
நிரை நடுவான கனிச் சீர் தவிர்த்து இருசீர் முச்சீருடன்
அடிகள்தோறும் நாலு சீர் அமைத்து குறைந்தது மூன்றடியோ
அல்லது அதற்கு மேலோ பல தலைகளும் விரவி வரையற்று வளர்வது
ஆசிரியப்பாவின் ஒருவகையான நிலை மண்டில ஆசிரியப்பா .
இலக்கிய எடுத்துக்காட்டு : தேவராய கவிராயரின் கந்தர் சஷ்டிக் கவசம் .

தம்பியுடன் ஓர் உரையாடல் :--

அண்ணே யாப்பு வரமாட்டேங்குதே
கஸ்டமா இருக்குதண்ணே !

தும்பிக்கை நாயகனை வணங்கி
நம்பிக்கையுடன் 108 தோப்புக்கரணம்
நீராடி நெற்றியில் நீரிட்டு குட்டி நித்தம் போடு
தப்பாமல் வரும் யாப்பு !

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா !

அவ்வையார் படிச்சிருக்கியா ?

இல்லை அண்ணே .
முதப்பாட்டுப் பாட்டுப்படி வேண்டாமண்ணே
இரண்டாம் பாட்டுபடி பன்னுதேன் அண்ணே

பண்ணினா ரெண்டு பாட்டுப்படி பண்ணு
இல்லே மொதப் பாட்டுப்படிதான் பண்ணனும்

சரிங்க அண்ணே ----

எழுதியவர் : கவின் சாரலன் (1-Oct-18, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே