உண்மை மனம்  

மனிதா
உன் வெளித்தோற்றம் 
அழகிய மலரானது 
உன் உள்தோற்றம்  
அசுர முள்ளானது 
நீ 
சூழ்நிலைக்கேற்றார் போல் 
முள்ளாகவும் மலராகவும் இருக்கிறாய் 
உன்னை சுற்றி இருப்பவர்களை எளிதில் ஏமாற்றி நடிக்கிறாய்
ஏன் இப்படி என கேள்விகேட்டால் 
என்னை சுற்றி இருக்கும் சமூகம் எனக்கு கற்றுக்கொடுத்தப்படமென
உரக்க ஒலிக்கிறாய் 
தீமைக்கும் நன்மைக்கும்
இடையில் சிக்கி தவிக்கிறாய் 
கோவத்தில் வெடிப்பொருளாய் வெடிக்கிறாய்  
மனிதா
போதும் போதும்
உன் போலித்தனம்
இனியாவது உண்மையாய் இருக்கட்டும் உன்மனம் !

எழுதியவர் : வாழ்க்கை கவிதை (2-Oct-18, 11:55 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 56

மேலே