ஆதி மனம்

இமைக்க நொடிகள் பேசுகிறது
என்னை தூரம் கடக்கவும் என்று !

காய்ச்சல் கண்ட கனிமரம்
மலை கண்ட மயிலாய் மகிழ்கிறது !

பேரிளம் கைக்கிளை கானல் பாட
இச்சி மரம் குயில் கூவுகிறது !

பார்பனம் பேசுகிறது பாரிஜாதத்தை
சூத்திரம் கேட்கிறது எங்கே ஜாதிமல்லி என்று !

கனவில் கை கொடுத்த கைம்பெண்
நனவில் கண்ட மறு சுமங்கலியாய் !

பழிப்பாவம் பாய்கிறது பாய்மரத்தில்
பெண் சாய்கிறாள் பத்தமடை பாயில்
வேறு வழியின்றி !

காற்றில் கைத்தடியும் காற்றாடியும்
காதல் காண்கிறது ஏளனமாய் நனவில் !

மொவனம் மனதை மயக்கிறது
சொற்கள் மனதை கலைக்கிறது
எல்லாம் உனதருகில் !

ஊக்கம் உற்சாகமாய் பறக்கிறது
தாழ்வு தற்கொலை செய்கிறது
அழகின் அற்புத முன்னால்!

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (3-Oct-18, 8:00 am)
Tanglish : Aathai manam
பார்வை : 78

மேலே