இழந்த-கடந்தப் பொழுதுகள்

காலைக் கூவும் இன்னோசைக் கேட்டு

தினமும் துயில் கலைந் தெழுவேன் ;

சாலையில் பாடசாலையில் ஆசானடி பணிந்து,

இயற்கையோ டியைந்தே யடியெடுத்தோம்;

கேட்போம் பகுத்தறிவு வளர்க்கும் செம்மலாய்

முவ்வினா கனைகளை தொடுத்து தெளிந்தோம் ;

கற்றோம் கல்வியல்லாது , ஒற்றுமை, போட்டி,

கலைகள் சிலவற்றை பாரம்பரியமா யென்றும் ;

மாலைப் பொழுதில் மட்டையில் முடித்து

கண்டு களிப்போம் கண்கொள்ளா காட்சிகளை ;

கூட்டா யொருக்கூடி வாழையாய் தழைத்து

மூத்தோரின் அன்பை அறிவுரைக் கேட்டோம் ;

விடுப்பை விரையமாகாமல் காடுபல ஏரியென

கழனியில் களப்பணி புரிந்து கூட்டுண்டோம் ;

எங்கேயெனது கடந்தப் பொழுதெண்ணி களிப்பேன்

யான் எந்திரத்தா லியங்கு மாக்களல்லேன் ;

இன்றோ யம்மவது இன்பத்தை புதைத்து

எதிர் தலைமுறையை மறந்தே தொலைக்கிறோம் ;

அன்றோ கண்ணெதிரே களித்த காட்சிகளை

இன்று திரையில் நிழலாக்கும் இளையோன் ;

என்றும் பெருமித் துரைப்பேன் யான்

இருபதினிறுதியில் தழைத்து இருனூறு காண்போன் !



- இருபதின் கடையோன் ! இரண்டொன்றின் இளையோன் !

மா - சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (3-Oct-18, 10:24 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 1280

மேலே