சந்தோசம்ன்னா என்னங்கஅது எங்கே கிடைக்குங்க கொஞ்சம் சொல்லுங்க

எனக்கு உனது என்பத்து நான்கு ஆகிறது.நான் ஈஸி சேரில் படுத்துக்க கொண்டே யோஜனைப்
பண்ணிக் கொண்டு இருக்கேன்
.ஐஞ்சு வருஷம் முன்னாடி வரை என் சம்சாரம் எனக்குட்ட இருந்தாள்.
தினமும் உப்பு, காரம், புளிப்பு,குறைவாக போட்டு சமையல் பண்ணி வந்தாள். அதுவே பாதி நாட்கள் ஜீரணம் ஆகாமல் கஷ்டப் படுக்க கொண்டு வந்தேன்.எதோ வீட்டு சாப்பாடு. அதிகமாக உடம்பை அதிகமாக பாதிக்காமல் காலம் தள்ளி வந்தேன்.
அவள் "காலம்" முடிந்து அவள் போக வேண்டிய உலகத்துக்கு போய் விட்டாள். நான் தனி மரம் ஆனேன்.பிள்ளையும் பொண்ணும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.அவள் இருக்கும் போதே எனக்கு கால் முட்டி வலி.கண் பார்வை சற்று மங்கலாக இருந்தது.பதவி படுத்தா ரெண்டு மணி நேர தூக்கமோ. இல்லை மூணு மணி தூக்கமோ. தான் இருந்து வந்தது.இந்த ஐஞ்சு வருஷ இணை வெளியிலே உடம்பு ரொம்ப மோசம்ஆயுடுசசி.
அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து விலைக்கு சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வரேன்.அவஙக என் உடம்புக்கு ஏத்த மாதிரி சமைப்பாங்களா. அந்த சாப்பாடு சாப்பிட்டா அடிக்கடி டாக்ட்டரை போய் வார்த்து விட்டு மருந்து சாப்பிட வேண்டி இருக்குது .ஆசையாக ஒரு மைசூர்பாக்கு சாப்பிட முடியலே, ஒரு பஜ்ஜி போண்டோன்னு சாப்பிட முடியலே. ஆசையாக வந்து பேசிப் போறவங்களும் இல்லே.பெத்த பிள்ளைகளும் பக்கத்திலே இல்லே.சதா தனிமை தான்.அதைத் தவிர இன்னும் இல்லே.
சதா தோலைகாட்சி பெட்டியே பார்த்து கிட்டு காலத்தை ஓட்ட வரேன்.பார்க்க நல்லாவா இருக்குது.எல்லா சிரியலிலும் சூழ்ச்சி ஏமாத்தல்,சண்டை, ஹாஸ்பிடல் ICU . அழுகை கத்தல். கத்தி குத்து, சூடு தான் அதிகமாக வருது.பாக்க பிடிக்கலே. சரி நாட்டு நடப்பு கேக்கலாம்ன்னு வச்சா, இந்த கடசிகாரன் அந்த கட்ச்சிக்காரனை திட்டறது, இவன் பண மோசடி பண்ணான், அவன் மோசடி பண்ணான் மாறி மாறி குற்றசாட்டு.நம்ப உடம்பிலே ஏற்கெனவே இருக்கிற BP இன்னும் ஏறுது.
வாய்க்கு ருசியா சாப்பிட முடியலே, பேச யாரும் இல்லே. மனதுக்கு பிடிச்சதே, பிடிக்காததே சொல்லிக் கொள்ள பக்கத்திலே ஒரு ஜீவனும் இல்லே. மருந்து மாத்திரையிலே வாழ்க்கை ஓடிக்ட்டு இருக்குது. "சந்தோசம்"ன்னு என்னங்க.சின்ன வயசிலே அது இல்லே. சரி நம்ம பெரியவங்க ஆகி. நம்ப கடைமைகளை செய்து குடிசை பிறகு நமக்கு சந்தோஷ தானா வரும்ன்னு எண்ணிக் கிட்டு இருந்தீங்க.ஆனா என் இது வரை அந்த வார்த்தை "சந்தோசம்" என்கிறது என்னன்னு இன்னும் தெரியலே.இனிமேவா தெரிய போவுது.எனக்கு நம்பிக்கை இல்லிங்க.இறந்த பின்னாலே நிம்மதி இருக்குங்க.ஆனா வாழும் போது தானேங்க சதோஷத்தை அனுபவிக்க முடியும் இல்லிங்களா
அந்த நாள்லே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புதிய பறவை என்கிற படத்திலே பல இன்னல்களை சந்திச்சு பிறகு தன் வாழ்க்கையிலே நிம்மதி இல்லாம தவிசப்போ அவர் " எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேணும். அங்கே இடம் வேணும்" ன்னு பாடினார்.ஆனா அது கடைசி வரைக்கும் கிடைக்கலே.அவர் ஜெயிலுக்கு போனார். எனக்கும் அது போல " எங்கே சந்தோசம், எங்கே சந்தோசம் அங்கே எனக்கோர் இடம் வேணும், அங்கே இடம் வேணும்"ன்னு பாட தோணுதுங்க. ஒன்னும் மட்டும் நிச்சியம். நான் வாழ்ந்து கிட்டு இருக்கும் போது அந்த சந்தோசம் கிடைக்குதோ இல்லையோ. ஒன்னு மட்டும் நிச்சியமா அந்த சந்தோசம் இந்த காலம் முடிஞ்ச பிறகு எனக்கு கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகம் இல்லிங்க.
காலிங் பெல் சத்தம் கேக்குதுங்க.வேலைக்காரி பார்வதி வந்து இருக்கான்னு நினைக்கிறேன்.என்னை தினமும் பாக்க அந்த ஒரு ஜீவன் தான் வந்து போறா. அதுவும் நான் மாசா மாசம் கொடுக்கிற முன்னுறு ரூபாய்க்காக.
அவ வராட்ட நான் இருக்கும் வீட்டை பெருக்கி துடைக்க என்னால் முடியாதுங்களே !!!!!!!!!

எழுதியவர் : ஜெ சங்கரன் (4-Oct-18, 11:10 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 151

மேலே