ஆரிடம் சொல்வேனடி தோழி

துயில் மீது ததும்பிய இரவை
சகுனிக்காற்று வெப்பமூட்ட
கனவெல்லாம் அழச்செய்தாய்.
நீ சென்ற பாதையில்
கலையாது கிடந்தன
அருகிலிருந்த அவ்வாசனை
கருப்பை காலங்களாக.
அந்த மௌனத்தில்
பனி புகைந்தது.
உன் அசைவின் மொழிகளில்
இந்தக்கவிதையும்
பேசாத பூவின் ராகங்கள்.
இருள் புடைக்கும்
ஜாம ஓசைகளில் கேட்கிறது
உன் மனம் கொட்டும்
அழுகையின் அருவி.
நம்பு
பாதங்கள் முந்தும்
சிகரங்களை...
உன் வெளிச்சங்கள்
என் நாட்காட்டியில்.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Oct-18, 7:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 1031

மேலே