ஜனனம் மரணம்

ஜனனம் மரணம்

சத்தமின்றி யுத்தமின்றி உடைந்த முட்டை தந்ததோர் ஜனனம்
சமையல் கட்டு மங்கை உடைத்த முட்டைக்குள்ளோ மரணம்
கட்டில்வழி காதல்கொண்டு மழலை ஒன்று ஜனனம்
அது தன் மழலைதனின் கடமை முடிக்குமுன்னே மரணம்
வாழும் முறை மறந்துபோன சமூகம் ஒன்று ஜனனம்
பாழும் முறை புகுந்ததனால் பண்பாடு இங்கு மரணம்

சாக்கடையின் வாழ்க்கையாக அரசியலும் ஜனனம்
வாக்குக்காக காசுவாங்கி மனிதமனமும் மரணம்
கையெழுத்தின்றி கடன்மறுக்கும் கலியுகர்கள் ஜனனம்
பொய்மையற்று வாக்குச்சொல்லில் வாழ்ந்த காலம் மரணம்

தவற்றின் வழி சேர்த்த பொருள் கொண்டுசெல்லும் உயரம்
எந்தவழி போனாலும் தப்பாது உன் மரணம்

எழுதியவர் : இளவல் (6-Oct-18, 4:04 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 262

மேலே