அவள் விடும் கண்ணீர்த்துளிகள்

அவள் விடும் கண்ணீர்த்துளிகள்
-------------------------------------------------------
(ஒரு போர்வீரன், நாட்டின் எல்லையில் பங்கேரில்
இரவில் தன ரிச்டவாச் வெளிச்சத்தில் தன
டைரியில் எழுதிய குறிப்பு , அவன் வீரனாய்
வெற்றி வாகையோடு வீடு திரும்ப...அவன்
மனைவி அதைப் படித்து ...புளகாங்கிதம்
அடைகிறாள்)


என்னவளே, என்னுயிர் கண்ணம்மா
நானறிவேன், எனக்காக, என்
பணியில் காணும் ஆபத்தை எண்ணி
நீ இரவெல்லாம் தூங்காது விழித்து
கண்ணீர் விடுகிறாய் ......
நீ அறியாய், நீ சிந்தும் அந்த
கண்ணீர் துளி ஒவ்வொன்றும்
ஆயிரம் களிற்றின் வீற்றம்
அளிக்குதடி என் நெஞ்சிற்கு
வீரம் பாய்ச்சி ;,நாளைப்பொழுதை
யாரறிவார்? ஆனால் ஒன்று மட்டும்
நானறிவேன் ..... நீ எனக்காக விடும்
கண்ணீர் துளிகள் இந்நாட்டிற்கு
என் தாய் நாட்டிற்கு என் உடம்பில்
ஒரு சொட்டு உத்திரம் இருக்கும் வரை
போரிட்டு எதிரிகளை விரட்ட செய்யும்
ஆயுதமாய் எனக்கமையும் என்னையும்
அது காக்கும் கலங்காதடி கண்ணம்மா
இன்றிரவு சமரில் உன் கண்ணீர்த்துளிகள்
காளியின் வேலாய் மாறி தாக்கிடும் எதிரியை.......
காத்திடும் உன் தாலியை , கலங்காதே நீ


டம்...டுடும்..... டம். டம் ...டுடும் டுடும்
(எதிரியின் தாக்குதல்).............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-18, 5:30 pm)
பார்வை : 1019

மேலே