காணாமல் போனதென்ன

இரைதேடி இரையும்
பறவையும் உறங்கிட
தடுமாறும் தனிமைஇரவினில்
விடியல் வெகுதூரமோவென
உயிர்வாட கூடாதென
உறவாட வந்தநிலவே...!

ஜன்னலின் வழியேயென்
முன்னிலே தோன்றினாய்..
மௌனமாய் நகைக்கிறாய்
மோகனமாய் நகர்கிறாய்
கள்ளமாய் முறைக்கிறாய்
தள்ளியே ஏன்நிற்கிறாய்....!

நிலவிடும் நிசப்தத்தில்
நிலவுனை தீண்டிடும்என்
ஒசையில்லா ஆசைமொழியும்
உனைவந்து சேர்ந்ததோ?
மேகத்தின் பின்சென்று
முகத்தையேன் மூடுகிறாய் ?

மேகத்தோடு உன்முகம்கண்டே
மோகத்திலாடுது என்மனமோ!

சிந்தையை சீர்தூக்கி
செந்தமிழ் சொல்செதுக்கி
காகிதத்தில் எழுதிவைத்து
கண்திறந்து பார்க்கையிலே
காணாமல் போனதென்ன ?

விரைந்தே இருட்டட்டும்
விடிந்த இப்பொழுது...!
நாளைய காதலர்நாம்
மறுமுறை பேசிட...!

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 3:47 am)
பார்வை : 92

மேலே