தொலையா உன்முக வரியில், நான் தொலைந்த முகவரியில்

விட்ட இடத்தில் மீள்தொடர
நாட்டம் கொண்ட மனசு
நாட்காட்டியிடம் கெஞ்சுது
விட்டகன்று போனவன்நீ
விட்டுவிட்டு போனால்என்ன?
உனக்காகவே துடிக்கும்-என்
இதயத்தை மட்டுமாச்சும்...
தொலையா உன்முக வரியில்-நான்
தொலைந்த முகவரியில்
விட்ட இடத்தில் மீள்தொடர
நாட்டம் கொண்ட மனசு
நாட்காட்டியிடம் கெஞ்சுது...!

எழுதியவர் : காசி.தங்கராசு (7-Oct-18, 6:54 am)
பார்வை : 112

மேலே