மரம் நடுவீர்

நன்றாய் விளையும் வயலழித்தே
நாலு சாலை போட்டிடுவார்,
என்றோ போட்ட சாலையோரம்
எழிலுற நின்ற மரமழிப்பார்,
இன்று சாலையைப் பெரிதாக்க
ஈடிலா இயற்கையும் அழிகிறதே,
சென்றதை மறந்து மரம்நடுவீர்
சாய்த்த மரத்தின் நினைவாகவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Oct-18, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maram naduveer
பார்வை : 37

மேலே