ஒரு முறையேனும்

ஒரு முறையேனும் :
ஆபிரகாம் வேளாங்கண்ணி,:
தினமணி கவிதைமணி
○○○
ஆறுகளில் ஓடும் நீரால் தான்
ஊர்களில் வாழும் வாழ்க்கை
ஓடிக்கொண்டே இருந்தது இன்று
ஆறுகளில் கழிவுகள் கலந்து
ஆங்காங்கே தேங்கி நிற்பதால்
ஊரார் வாழ்க்கையும் தேங்கியது

ஜலதேவதையே தேங்கியோர்
ஏங்கியோர் மேலோங்கி எழு
"ஒரு முறையேனும்" நின்றன்
கருணைக் கண்ணி யிரண்டை
திறந்திட மாட்டாயா கார்மேகத்தை
ஏவியெங்கள் தாகத்தை தணித்திடும்
யோகத்தை அளித்திட வேண்டும் ஆவணம் செய்திடுவாய் தாயே

அண்டை மாநிலத்தவரோடு நாளும்
மண்டையை உருட்டி பலனேயில்லை
தொண்டை வற்றியதே எஞ்சியது
உரிமையை கெஞ்சிப் பெருவாரோ
உரிமை மீறல்கள் போடுது வேஷம் அறிவு கவசம் உடுத்தி செய் துவசம்
அஞ்சிடலில் பல னேது முண்டோ

பூக்கடையில் மீன்களை தேடுவதும்
சாக்கடையில் பூக்களை தேடுவதும்
நாவுக்கடியில் உமிழ்நீர் சுரந்தாலோ
சிலர் விழங்குவார் சிலர் உமிழ்வார்
உமிழ்நீரை மட்டுமா வாய் பேசிடும் வார்த்தையையும் தான் அறியீரோ
ஒரு முறையேனும் குறைத்தீருமா
°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா
நன்றி
"ஒரு முறையேனும்"
கவிதைமணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Oct-18, 3:06 pm)
Tanglish : oru muraiyenum
பார்வை : 92

மேலே