மழை இரவு

மழை இரவு :
ஆபிரகாம் வேளாங்கண்ணி :
தினமணி கவிதைமணி
~~~~~~~~~~
"மழை இரவு" மழையால்
நனையிதிங்கு நம் உறவு முக்
காலத்துள் ஒரு கால வரவது
பூமி குளிர்ந்து மனதிற்கு நிறைவு
நோய்கள் குமுறி ஓடி மறைவு
பசுமைக்கில்லை ஒரு குறைவு

ஆழ்ந்து சிந்திக்க ஆதரவிழந்து
நடைபாதை மனங்கள் நாளும்
படும் உபாதை கொஞ்சமன்று
ஆண்டுக்கு ஆண்டு நிகழும்
பழகிவிட்ட ஒன்றாயினும் மழை
இரவு அதை வெருப்பாரில்லை

இரவு தூக்கமில்லை ஒருபக்கம்
வெள்ளம் வருமோ அடித்து போய்
பள்ளத்தில் விட்டு விடுமோயென
நாடி நரம்பெல்லாம் மிருதங்கம்
வாசித்திட பயந்து யோசிக்கும்
நிலை மாற வேறு வழியில்லை

வாரைமேல் அமைந்த கூரையை
வாரி எறிந்து விடுமோ காற்று
நாப்பக்க சுவரையும் மேப்பக்க
கூரையையும் உற்று நோக்கியே
கோழித்தூக்கம் தூங்கி நாளும்
காலத்தை கழிக்கும் நிர்பந்தம்

இருள் என்றாலே மிரள் என்றே
பொருள் கொண்டு மிரட்டிவிடும்
அதிலும் "மழை இரவு" நித்திரைக்கு
அரக்கு பூசி முத்திரை குத்திவிடும்
யாரைச் சொல்லிக் குற்றமில்லை
கடவுள் செய்த குற்றமென்றாகிடும்
°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Oct-18, 3:22 pm)
Tanglish : mazhai iravu
பார்வை : 405

மேலே