சிதறல்

.
அந்த
பேருந்து நிறுத்தத்தில்

பிங்க் நிற
குச்சி ஐஸ் வாங்கிய
பெட்டிக்கடையில்

நாவற்பழம் வாங்கிய
சாலை ஓரத்து
பூமர நிழலில்

நாணயத்தை
நீ தவறவிட்டுக்
குனிந்தெடுக்கும்
ஆளரவம் நிறைந்த
ஒவ்வொரு தருணமும்

எனக்காக விட்டுச் செல்ல
உன்னிடம் இருந்தது
சிதறாத உன் புன்னகைகள் ...

கடைசியாக
ஒரு முறை
நம் தனித்த
வனாந்தர பயணிப்பில்
என்னிடமிருந்து
முத்தம் ஒன்றைப்
பறித்துச் சென்ற
தருணம் ஒன்றைத்
தவிற. ...

எழுதியவர் : முகிலன் (10-Oct-18, 5:54 am)
சேர்த்தது : முகிலன்
Tanglish : sitharal
பார்வை : 386

மேலே