மனிதன் இருக்கின்றானா…

#மனிதன் இருக்கின்றானா…?

சாதி நெருப்பினில் வேகுதய்யா - உயிர்
காதல் பாதி வழி சாகுதய்யா..!
உயிர் மதிப்பில்லை சாதி முன்னே
உயர்குடி என்பார் மனிதர் எங்கே..!

ஈன்ற மகள் என்ற பேதமின்றி
மேயும் அவலங்கள் நாட்டில் ஐயோ..!
பெற்ற மகளையும் பெண்டாடல் இன்று
இற்று விட்டான் மனிதன் இதயமற்று.!

உத்தமன் என்றே சொல்லி என்றும்
ஊரை சுரண்டலில் ஏழை சொத்தும்
காக்கி சட்டை கூட்டின் ஆட்டத்திலே
காணாமல் போகுதே மனிதம் நித்தம்..!

கோவிலிலும் வன் கொடுமை - இங்கு
பச்சிளம் பிஞ்சும் பலி ஆகுதின்று
காமம் கொண்டே நரி உருக்கொண்டு
வேட்டையிங்கே மானுட பேரில் இன்று..!

இரத்தம் சிந்தி நின்ற போதினிலும்
ஈரம் நெஞ்சில் அது ஏதுமில்லை
என்ன உள்ளதென்று தேட்டை போட்டு
இன்பம் காணும் மாக்கள் தொல்லை..!

கோவிலிலும் சூறை ஆடுகின்றார் - கடவுள்
கூட்டுக் களவாணி கையில் பொம்மை
மூலை முடுக்கினில் தெய்வமென - சிலர்
வாழ்வதனால் பூமி சுற்றும் உண்மை..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (10-Oct-18, 9:56 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 1191

மேலே