புவியில் பெயர் பொறித்த தமிழன்
#புவியில் பெயர் பொறித்த தமிழன்
பெயர் பொறித்த தமிழன் என்று
எவரை எடுத்துச் சொல்ல
கண் முன்னே வருகின்றார்
கம்பன் வள்ளுவனும் மெள்ள...!
கற்பனையின் உச்சம் தொட்டு
காவியத்தில் கம்பனவனும்
இராமயானம் வடித்து புவியில்
வாழ்கிறானே இன்னும்..!
அயோத்தி அழகை சொல்லி
அள்ளிக்கொண்டான் மனதை
ராமன் சீதை மாண்பை சொல்லி
வலம் வருகிறான் இவ்வுலகை..!
பிடிப் பிடியாய் தமிழள்ளி
வடித்தான் பெருங்கதையை
படித்திடவே செல்கின்றோம்
அழகு அயோத்தி மாநகரை..!
சூழ்ச்சி சதி குடி கெடுக்கும்
சோகமதை சொன்னான்
காடெனினும் உடன் சென்ற
தமையன் பாசம் சொன்னான்
கங்கைக் கரை குகனவனின்
அன்பை அளந்து சொன்னான்
நட்பதனின் இலக்கணத்தை
நல்லோர்க்கெனவே உரைத்தான்..!
இராவணன் சிறையெடுக்க வாழ்ந்த
சீதை கற்பை புகழ்ந்தான்
மாற்றான் மனைவி மீது காதல்
அழிவுக்கென மொழிந்தான்..!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
ஒழுக்க வாழ்க்கையை
வரையறுத்த கம்பன் வாழுகிறான்
பெயர் பொறித்த தமிழனாய்…!
#சொ.சாந்தி