ஆண்டவன் பத்தினியும் நீ வர ஆடையை தேடுகிறாள்

பிறப்பின் ரகசியமே இங்கே
பரம்பொருளின் திருஉருவாம்
விண்ணுயர கோபுரங்கள் -அதில்
கண்நிறைய காமசிற்பங்கள்...ஆம்
ஆடைகள் கடந்த ஆன்மத்தை நோக்கென
ஆண்டவன் சன்னதியில் ஆகம குறிகள்...!

சுடுகின்ற சூரியன் தொலையாத ரகசியம்
சுழல்கின்ற பூமியென சித்தம் தெளிந்தோர்
அலைந்தாடும் ஆணவ ஆண்சக்தி நிலைத்தாட
அழகோடும் அறிவோடும் சிவசக்தி செய்தார்
சக்திக்கு மட்டுமே தனிக்கோயில் சமைத்துநம்
புத்திக்கு சொன்னார் பெண்மையின் புனிதம்...!

போற்றற்குரிய பெண்மையிங்கே
போகப்பொருளாய் போனதென்ன?
காமவெறி கயவர்களால்
வன்புணர்வில் வீழ்ந்ததென்ன?
பொறுத்திருந்த பூமிப்பெண்- ஆழிப்
பேரலையாய் அழித்ததுகாண்...

ஆண்டவன் பத்தினியும்- நீ வர
ஆடையை தேடுகிறாள்
கணவனை மறுக்கிறாள் உலாவர
கயவன்உந்தன் வீதியில்...
பிரளயம் தந்திடுவான்சிவன்
பிறர்பெண்ணாசை ஒழியாதெனில்...

எழுதியவர் : காசி.தங்கராசு (11-Oct-18, 2:33 am)
பார்வை : 79

மேலே