மாற்றம்

இன்றும் நான் நாளை யாரோ........எல்லாம் மாயை.... எல்லாம் சிறு காலம் தான்....

குறுஞ்செய்தி பல பறந்து இருவரிடையே பரிமாணம் பல நடந்து இருக்கும்.....

வாழ்வில் இதை கடந்து இல்லாதவர் யாரும் இலர்....

என்ன தான் பேசி பொழு போகும் என்று தெரியாது ... போன் பேட்டரி சக்தி குறையும் அளவிற்கு பேசி இருப்போம்.....

வெட்டி பேச்சு தான் நடந்து இருக்கும்...

வீட்டில் அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கியும்,,, சண்டை போட்டும் ... தகவல்கள் பரிமாறி இருப்போம்....

போனில் பட்டன் தேயும் அளவிற்கு நேத்து முக்கியமாக தெரிந்த நபர் இன்று யாரோ ஒருவராய் மாறும் அவலம் நம்மிடையே.....

ஒரு வார்த்தை தகவல் வந்தாலும் பல குறும் தகவல்கள் பரிமாற்றப்படும்.....

ஒரு சின்ன பரிசு வாழ்கையின் பொக்கிஷமாக மாறியது இந்த யுகத்தில்....

காலம் தான் பிரித்ததோ.... கடமை தான் பிரித்ததோ

தூரம் தான் பிரித்ததோ.... என் அன்பு தான் பிரித்ததோ.....

எல்லாம் சிறு காலம் தான்......

அளவுக்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப் பட்டு , பின்பு ரசிக்க பட்டு இறுதியில் உதாசீனம் படுத்த படுகிறது.....

நேற்று யாரோ ஒருவருக்கு நாம் முக்கியமாக இருந்து இருப்போம் ... ஆனால் இன்று.... (....?????)

எல்லாம் மாறும் மாற்றம் என்ற ஒன்றை தவிர......

எழுதியவர் : மஞ்சுகீதாநாதன் (11-Oct-18, 6:37 pm)
சேர்த்தது : பிரிய சகி
Tanglish : maatram
பார்வை : 286

மேலே