குட்டிக் கவிதைகள்

பிறர் நிழலில் நில்லாதே
நீயே உனக்கு நிழலாகு
கற்றுக் கொடுக்கிறது காளான்.
**
மேகம் கருக்கவில்லை
சொட்டுச்சொட்டாக விழுகிறது
விவசாயி கண்ணீர்.
**
சம்பள உயர்வு பேச்சு வார்த்தை
முடிவுக்கு வருவதற்குள் நிகழ்ந்து விடுகிறது
விலைவாசி உயர்வு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Oct-18, 2:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kuttik kavidaigal
பார்வை : 264
மேலே