அவள் ஓர் வானவில்

ஒரு வானவில்போல் எழிலே உருவாய்
என்முன் வந்தாயடி பெண்ணே நீ,
கண் இமைத்து ஓர் பார்வை தந்தாய்,
புன்முறுவல் தந்தாய், என் மனதை
உன் மனதில் சிறையிலிட்டாய் ,
என்னையே திருடிக்கொண்டாய் ,
பெரும் கள்வனைபோல் , மௌனமாய் .

விண்ணை மண்ணோடு சேர்க்கும்
அந்த வானவில்போல் என்னை
உன்னோடு சேர்த்துக்கொண்டாய் .
ஈருடல் ஓருயிர் ஆனதோ என்னவளே!
நீயோர் வானவில் என் வாழ்வில்,
என்றும் எழில்கொண்டிருக்கும் வானவில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-18, 2:31 am)
Tanglish : aval or vaanavil
பார்வை : 160
மேலே