நிலவுக்கு என்மேல் கோபம் ஏனோ

குளிர் நிலவாய் என்னுள்ளத்தை
கவர்ந்த உன் முகத்தில் இன்று
ஏனடி கண்ணே, எள்ளும் கொள்ளும் தெறிக்கிறது
உன் பார்வை தண்ணிலவாய் காயாமல்
அனல் நிலவாய் காய்வதேன் , ஏன்? எப்போது?; அடியே,
உன் அணைப்பில் இத்தனை நாள்
வீசும் வாசமிகு தென்றலின் சுகம் கண்ட நான்,இன்று
உன்னை எட்டி எட்டி வருகையிலே என்னை
விட்டு விட்டு நீ பொன்னே, பின்னே போவதேனோ ?
இப்படி தென்றல் நீ புயலாய் மாறியதெப்போது?

இப்போது புரிகிறதடி பெண்ணே உன் சீற்றம் ஏன்
ஏன் மீது ஏன் என்று..............நேற்று 'எக்ஸ்பிரஸ் மாலில்
ஒரு பெண்ணோடு என்னை கண்டுகொண்ட உன் தோழி
உன்னிடம் கோள் சொன்னாளோ?...... அடியே , கேள்
அவள் என் தூரத்து உறவு முறை, அமெரிக்காவில்
வசிப்பவள், நேற்று முன்னாள் இங்கு வந்த அவள்
ஏதோ தன குழந்தைக்கு 'இந்தியன் டால்ஸ்' வாங்க
என்னை அங்கு கூப்பிட்டு போக சொன்னாள்..அவள்
உறவில் எனக்கு தங்கை முறை, புரிந்துகொள் இப்போது
இதற்கெனவோ வானமே விழுந்ததுபோல் ஒரு
ருத்திர தாண்டவம் காட்டுகிறாய் பார்வையில்
ஆறிடுவாய் பெண்ணே ஆறிடுவாய் என்னை மீண்டும்
பார்த்திடுவாய் தன்னொளி தரும் வெண்ணிலவாய்
இந்த உன்னவன் எப்போதும் உன்னவனே ,
சீதைக்கு ராமனைபோல், ஒருபோதும்
ராதைக்கு கண்ணன் அல்லன் நான்,...
நிலவே, உனக்கு இன்னும் என்மேல் கோபம்
தேவைதானா...... சொல்லடி... சொல்லடி கண்மணி.
என் காதல் வெண்ணிலவே, தண்ணிலவே .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-18, 8:45 am)
பார்வை : 63
மேலே