அற்பனுக்கு பவுசு, ஐயனுக்கு மவுசு

சிந்தாமல் அள்ள
சிரிப்பின் ஓலி துள்ள
உள்ளத்தின் இருக்கையிலே
ஒய்யாரம் கூட்டுதடி உன் சிரிப்பு
அழகிய ஓடமென நான் மிதந்து
காதலெனும் கரையொதுங்கி
திக்குமுக்காட செய்யுதடி என் மனம்
கள்ள சிரிப்பழகி
காதலெனும் வெள்ளத்தினால்
ததும்பித் தான் நிற்கிறதே எந்தன் உள்ளம்

வெற்றிடமாய் இருந்த உள்ளம்
ஏதோ ஒன்றினால் பூரித்து விட்டதடி
அது மட்டும் புரிகிறது
அற்பனுக்கு பவுசு ஐயனின் மவுசு
இதுவென்று சொல்கிறது .
இதுதான் கண்ணனுக்கு தெரியாத
கண்ணாம்பூச்சி காதலா/
நான் வேறு உலகத்தில் வாழ்வது போல்
உணர்வலைகள் சொக்க வைக்கின்றது
காதலை புரிந்து கொள்ள
உன் சிரிப்பு மட்டும் போதுமடி

உயர்ந்து நிற்கும் எந்தன் உள்ளம்
எனக்கு உணர்த்துதடி
உத்தமனாம் நான் என்று
கள்ளமில்லா உள்ளத்தான்
கருணை கொண்ட எண்ணத்தால்
கௌவரவத்தால் சூழ்ந்து நிற்கும் என்னை
காதலும் கொள்ளை கொள்ளும்
கண்ணியமும் அரண் கட்டும்.
மனிதன் என்றால் என்ன என்று
மயக்கமும் தெளிகிறது. மனிதமும் புரிகிறது .

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Oct-18, 11:38 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 61
மேலே