திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து

பூமணக்க புகழ்மணக்க
பொற்பின் எழில்மணக்க
இதழ்மணக்க இசைமணக்க
இன்பச்செந்தமிழ் இல்லமெல்லாம் மணக்க
பெற்றோர் பெருமையுற
உற்றார் உளமகிழ
மலரும்மணமும் படைசூழ
மங்கலவாத்தியம் பொங்கியெழ
சங்கம வாழ்வில் இன்பமுற
எந்தமிழ் தாயின் ஆசிபெற
இல்லறமெனும் நல்லறத்தோட்டம்
மழலை பூக்களால் நிறைந்துவிட
உழைப்பும் திறனும் மேன்மையுற
வாழ்த்துதே எந்தன் நெஞ்சமுமே

எழுதியவர் : இளவல் (12-Oct-18, 12:39 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 36
மேலே