பிச்சைக்காரன்

ஏ கடவுளே !!

எனக்கு மட்டும் தானே
தெரியும் - தேவலோகத்திலும்
மின்சாரத் தட்டுப்பாடு உண்டென்று..!

நீதான் எல்லாமறிந்த
சிவனாச்சே !!
அடியேன் புலம்பும் தமிழ்
விளங்கவில்லையா ??
இல்லை,
கருப்பு பணத்தை பாதுகாத்து
உதவியதற்கு - மாதம்
ஒருமுறை வரிசெலுத்தும்
பணக்காரக் கூட்டத்திருக்கு
இடையே - அட !
இவன் பிச்சைக்காரன் தானே என்று
செவி சாய்த்து
கேட்கவில்லையா ???

கேள்,
நான் உரக்கச்சொல்கிறேன் !!
உன் செவி துறக்கச்சொல்கிறேன் !!

இருட்டில் நீ படைத்த
பிறவிக்கு இருள்சூழ்ந்த என்
வாழ்க்கையே ஓர்
அடையாளமென்று !!!

போகிறபோக்குல வந்து
முறையிட்டவனுக்கெல்லாம்
முழுமையான வாழ்க்கையை தந்த !!

என் போக்கே நீதான்னு
கிடந்தவனுக்கு உன் வாசல்
படியிலயே முழுநேர ஊழியனா
ஒரு வேலையை தந்த !!

உன் கருணையைக்கண்டு
வியக்குது என் சிந்த !!

பெத்தவளும் இல்லாம,
வந்தவளும் சொல்லாம
போனதை எண்ணி !!

தினம் ஆயிரம் முறை
சிந்தினேன் தண்ணி !!

காது கேட்கும் மனிதர்களே
சிலையாகி தினம் தினம்
என்னை கடக்கும்பொழுது,
பிறப்பிலே சிலையாகி நின்ற
உன்னிடம் உலறி
என்ன பயன் ??

இப்படிக்கு
அழுக்குச்சட்டையும்,
தோளில் நூல்தறித்த பட்டையும்,
கையில் நாலு சில்லரை சுமக்கும் தட்டையும்,
கழுத்தில் ருத்ராட்ச்ச கொட்டையும்,
அணிந்த
மானுடம் சிரிக்கும்
பிச்சைக்காரன்..!!

எழுதியவர் : கவிஞர்.விஜெ (12-Oct-18, 6:45 pm)
சேர்த்தது : கவிஞர் விஜெ
Tanglish : pichaikkaran
பார்வை : 1160

மேலே